Dataset Viewer
Auto-converted to Parquet
classic
stringlengths
19
1.22k
Description
stringlengths
5
2.28k
திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்\nவிண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து\nதிண் வார் விசித்த முழவொடு ஆகுளி\nநுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில்\nமின் இரும் பீலி அணி தழை கோட்டொடு\nகண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்\nஇளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு\nவிளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ\nநடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை\nகடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி\nநொடி தரு பாணிய பதலையும் பிறவும்\nகார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப\nநேர் சீர் சுருக்கி காய கலப்பையிர்
பையில் முழவு முதலான இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு செல்பவர்களைப் பார்த்து ஆற்றுப்படுத்தும் புலவர் சொல்லத் தொடங்குகிறார். கூத்தர் கூட்டத்தில் பாணன் வைத்திருக்கும் இசைக்கருவிகள் பேரியாழ் (பாடலடி ) மீட்டும் பாணன் (பாடலடி ) தன் இசைக் கருவிகளைத் துணிப்பையில் போட்டுத் தோளில் சுமந்துகொண்டு செல்கிறான். கலப்பை - கலம் என்னும் சொல் பொது வகையில் இசைக் கருவிகளையும், சிறப்பு வகையால் யாழையும் குறிக்கும். எனவே இவற்றை வைத்திருக்கும் பை கலப்பை. முழவு - யாழோசை மழை பொழிவது போல எல்லாராலும் விரும்பப்படும் தன்மையதாக இருக்கும். முழவு ஓசை மழை பொழியும்போதே முழங்கும் இடி போல இருக்கும். ஆகுளி - யாழோடும் முழவோடும் சேர்ந்து முழங்குவது ஆகுளி என்னும் சிறுபறை. (கஞ்சரா?) பாண்டில் - வெண்கலத்தை உருக்கிச் செய்த தாளம். உயிர்த்தூம்பு - யானை பிளிறுவது போல உயிர்ப்பொலி தரும் கொம்பு. அதன் வளைவமைதி தன் தலையைப் பின்புறமாகத் திருப்பிப் பார்க்கும் மயிலின் பீலிபோல் அமைந்திருந்தது. குறும்பரந்தூம்பு - மெல்லிய இரங்கல் ஓசை தரும் ஊதுகொம்பு. குழல் - அழைத்திழுக்கும் ஒலிதரும் குழல்.(கண்ணன் குழலோசை ஆடுமாடுகளை அழைத்திருத்தியதை இங்கு நினைவு கூரலாம்.) தட்டை - ஒருபுறம் கோலால் உரசி இழுத்தும் மறுபுறம் கோலால் தட்டியும் இசை எழுப்பும் உருமிமேள வகை. (சப்பளாக் கட்டையுமாம்). எல்லரி - மோத ஒலிக்கும் பெரிய தாளவகை. பதலை - கடம் என்று நாம் கூறும் பானை. மற்றும் பல. இவற்றை யெல்லாம் வேரில் காய்த்துத் தொங்கும் பலாக்காய் போலப் பாணர்கள் சுமந்து சென்றனர்.
கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில்\nபடுத்து வைத்து அன்ன பாறை மருங்கின்\nஎடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி\nதொடுத்த வாளியர் துணை புணர் கானவர்\nஇடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும்
நீங்கள் செல்லும் வழியில் வழிப்பறி செய்ய அம்பு தொடுத்துக்கொண்டு காத்திருக்கும் கானவர் உங்களுக்குத் துன்பம் செய்யமாட்டார்கள். துணைபுணர் கானவர், துணைபுரியும் கானவர். கண்ணுக்கு எட்டிய தூரம் நெருங்கித் தழைத்திருக்கும் மரம் அடர்ந்த காட்டில் படுக்க வைத்தது போன்ற பாறைகளும், நிறுத்தி வைத்தது போன்ற பாதை வழிகளும் இருக்கும். வில்லம்பு வைத்திருக்கும் கானவர் அந்த இடங்களில் உங்களுக்குத் துணையாக வருவர். துன்பம் செய்யாமல் வழி காட்டுவர்.
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது\nஇடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி\nதொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்\nகடிப்பகை அனைத்தும் கேள்வி போகா\nகுரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின்\nஅரலை தீர உரீஇ வரகின்\nகுரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ\nசிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி\nஇலங்கு துளை செறிய ஆணி முடுக்கி\nபுதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து\nபுதுவது போர்த்த பொன் போல் பச்சை\nவதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால்\nமடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து\nஅடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப\nஅகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது\nகவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி\nநுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை\nகளங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்\nவணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ்
அருப்பம் என்பது மக்கள் செல்லாத அருகிய இடங்கள். பாண! அருப்பத்தில் நீங்கள் செல்லக் கூடாது. மக்களின் கால்தடம் பதிந்த இயவு வழிகளிலேயே செல்ல வேண்டும். பேரியாழின் உறுப்புக்கள் திவவு - முறுக்கிய வளையல்போல் இருக்கும். கேள்வியாழ் - கடியப்படும் பகை நரம்புகளில் விரல் போகாமல் இசைத்துப் பழக்கப்பட்டது. நரம்பு - செம்மையாக முறுக்கப்பட்டுள்ளதால் குரலின் ஒலிபோல் இனிமையாக ஒலிக்கும். அரலை - அரற்றும் ஒலி தராதது. துளை - நரம்பு கோத்திருக்கும் துளை. இது வரகு அரிசி போல் இருக்கும். பத்தல் - இங்கிருந்துதான் மலையின் எதிரொலி போல் யாழின் மிழலை எதிரொலிக்கும். ஆணி - புதிய வெண்ணரம்புகள் ஆணியில் கட்டித் துளையில் முடுக்கப்பட்டிருக்கும். பச்சை - பத்தலுக்குத் தீட்டப்பட்ட இலை வண்ணம். உந்தி - மணம் கமழும் கூந்தல் இரு பிளவாய் மார்பில் விழும். மடந்தையின் கொப்புளில் அழகுடன் மயிர் ஒழுகியிருப்பது போன்ற வரைவுகளுடன் இரு பிளவாய்க் கிடக்கும் யாழின் வயிறு. மாமை - காதல் பருவத்தில் பெண்கள் மேனியில் தோன்றும் பொன் நிறம். இது பொன்னை அரத்தால் அராவும்போது உதிர்ந்த துகள்போல் அழகு தரும் நீர்மை பட்டுக் கிடக்கும். யாழிலும் இப்படிப்பட்ட அழகமைப்பு தீட்டப்பட்டிருந்தது. உரு - களாப்பழம் போன்ற கருமையால் பளபளக்கும் பாங்கினைக் கொண்டிருந்தது. பெண்ணின் இந்தப் பளபளப்புப் பொலிவை யாழும் கொண்டிருந்தது. அது பேரியாழ். பேரியாழ் வளைந்து நிமிர்ந்த கொம்பு போன்றது. யாழிசை : சீறியாழின் இசை - இன்பத்தில் தோய்த்துக் கேட்போரை மயக்கும். பேரியாழின் உயிர்ப்பிசை எழுச்சியூட்டும்.
அமைவர பண்ணி அருள் நெறி திரியாது\nஇசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப\nதுறை பல முற்றிய பை தீர் பாணரொடு\nஉயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின்
பேரியாழ்ப் பாணரோடு அவர்களின் தலைவன் உயர்ந்தோங்கிய மலையில் ஏறுகிறான். யாழை இசைத்துக்கொண்டே களைப்புத் துன்பம் தெரியாமல் பாணர் கூட்டம் ஏறுகிறது. அவர்களிடம் இசைச் செல்வம் இருந்தது. அதனை அவர்கள் அருள்தரும் பாங்கில் அள்ளி வழங்குவார்கள். அமைந்த விருப்பத்தோடு பண்ணிசைத்து வழங்குவார்கள்.
தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின்\nமீமிசை நல் யாறு கடல் படர்ந்து ஆஅங்கு\nயாம் அவணின்றும் வருதும் நீயிரும்
ஆற்றுப்படுத்தும் புலவர் பாணனுக்குச் சொல்கிறார். மீமிசை நல்யாறு - மலையில் உதிர்ந்த மலர்களை ஆற்றுநீர் சுமந்துகொண்டு கடலை நோக்கி வருவதுபோல் நன்னன் அள்ளாமலும் அளக்காமலும் கொட்டிய வளங்களைச் சுமந்துகொண்டு நாங்கள் அவனது செங்கண்மா நகரிலிருந்து எங்களது இருப்பிடம் நோக்கிச் செல்கையில் இங்கு வந்துள்ளோம்.
புள்ளினிர் மன்ற என் தாக்குறுதலின்\nஆற்றின் அளவும் அசையும் நல் புலமும்\nவீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும்
வழியில் அவன் நாடு சுரக்கும் வளங்களையும் பெறலாம். உங்களுக்கு நல்ல நேரம் [புள்ளினிர்] வெயில் பட்டு வாடும் [எல் தாக்குறுதலின்] நீங்கள் இனி வாட வேண்டா. அவன் ஆற்று வளமும், ஓய்வு கொள்ளும் இடமும் உங்களுக்கு ஆறுதல் தரும். அவற்றின் வளத்தால் உணவுப் பொருள்களை வழங்குவதில் பெருமை கொண்டது அவன் நாடு
மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின்\nபுதுவது வந்தன்று இது அதன் பண்பே\nவானம் மின்னு வசிவு பொழிய ஆனாது\nஇட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய\nபெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து
அவன் நாட்டில் வளமெல்லாம் பழுத்துக்கிடக்கும். புதுப்புது வருவாய் கிடைத்துக்கொண்டேயிருக்கும். இது அந்த நாட்டுக்குப் புதியது அன்று. அந்த நாட்டுப் பண்பு அப்படி. பருவமழை தவிராது பொழிந்து போட்டதெல்லாம் பொன்னாக விளைந்ததால் வந்தது.
தீயின் அன்ன ஒண் செங்காந்தள்\nதூவல் கலித்த புது முகை ஊன் செத்து\nஅறியாது எடுத்த புன் புற சேவல்\nஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தென\nநெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய்\nவெறிக்களம் கடுக்கும் வியல் அறைதோறும்\nமண இல் கமழும் மா மலை சாரல்
காந்தள் பூ சிவப்பு நிறத்தில் பூத்திருந்தது. அதனைப் புலால்-கறித்துண்டு என்று கருதி எடுத்துச் சென்ற கழுகு உண்ணாமல் உதிர்த்தது. அவை அகன்ற பாறைகளில் விழுந்து நெருப்புப் பிழம்புகள் போலக் கிடந்தன. மணலில் உதிர்ந்தவை மணம் பரப்பிக்கொண்டிருந்தன. முருகனை வேண்டி வெறியாடிய களத்தில் புலவுத் துண்டுகள் ஆங்காங்கே கிடக்கும். அதுபோலக் காந்தள் பூக்கள் பாறைமேல் பூத்துக் கிடந்தன.
அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி\nகன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து\nசேந்த செயலை செப்பம் போகி\nஅலங்கு கழை நரலும் ஆரி படுகர்\nசிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி\nநோனா செருவின் வலம் படு நோன் தாள்\nமான விறல் வேள் வயிரியம் எனினே
கானவர் பாக்கத்தில் அன்று இரவு தங்கியிருந்துவிட்டு மறுநாள் ஆரியப் படுகர் வாழும் பாக்கம் செல்லுங்கள். எரிபோல் தழைத்துச் சிவந்திருக்கும் செயலையந் தளிர்களை மாலையாகத் தொடுத்து சுற்றத்தார் அனைவரும் அணிந்துகொண்டு செல்லுங்கள். மூங்கில் அடர்ந்து அடைந்துகிடக்கும் அப் பாக்கத்துக்குச் சென்றபின், நாங்கள் மான விறல் வேல் நன்னனைப் பார்க்க வந்த பாணர்கள் என்று சொன்னவுடனேயே....
ஏறி தரூஉம் இலங்கு மலை தாரமொடு\nவேய் பெயல் விளையுள் தேம் கள் தேறல்\nகுறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை\nபழம் செருக்குற்ற நும் அனந்தல் தீர\nஅருவி தந்த பழம் சிதை வெண் காழ்\nவரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை\nமுளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை\nபிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ\nவெண் புடை கொண்ட துய் தலை பழனின்\nஇன் புளி கலந்து மா மோர் ஆக\nகழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து\nவழை அமை சாரல் கமழ துழைஇ\nநறு மலர் அணிந்த நாறு இரு முச்சி\nகுறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி\nஅகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ\nமகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்
வீடுதோறும் பெறும் உணவு வகைகள். தேன் - மரத்திலும் பாறையிலும் ஏறிப் பெறப்படும் மலைத் தாரம். (தரும் பொருளைத் தாரம் என்பது பழந்தமிழ் வழக்கு) தேறல் - தேனை மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்துக் கள்ளாக்கிப் பருகத் தருவது தேறல். நறவு - (உண்டார்கண் அல்லது அடுநறா …குறள்) காய்ச்சி வடித்த மணநீர். இது மகிழ்ச்சி தரும் குடிவகை. தேங்காய் - அருவி அடித்துக்கொண்டு வந்த பழம். இதைச் சிதைத்தால் உள்ளே இருப்பது வெள்ளை வித்துப் பொருள். கடம்புமான் கறி - வருவிசை அம்பால் பெற்றது. முள்ளம் பன்றிக் கறி - கொழுப்பை அரிந்து எறிந்துவிட்டுப் பங்கிட்டு வைத்த முளவுக் கறி - பெண்நாய் முடுக்கிப் பிடித்துக் கொண்டுவந்த விலங்குக்கறி பழன் - இது நெருப்புக் கட்டி வெண்மையாகும் வரையில் புடையடுப்பின் மேல் புலாலை வைத்து வாட்டிப் பழுப்பாக்கிய பழன். மாங்காய் போட்ட மோர்க்குழம்பு - (இனிப்பும் புளிப்பும் கலந்த மாங்காய்) நெல்லரிசிச் சோறு - (மூங்கில் போல் வளர்ந்த நெல்) இதனைச் சமைத்த குறமகள் தன் கூந்தலை உச்சிக் கொண்டையாகப் போட்டு முடிந்திருந்தாள். இந்த முச்சியில் மணம் கமழும் பூவைச் சூடியிருந்தாள். அவள் சமையலின் மணம் வழைமரம் மிக்க மலைச்சாரல் எல்லாம் கமழ்ந்தது. சோறு வெள்ளை வெளேரென்று மலர்ந்திருந்தது. தன் மக்களுக்கு இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று தடுத்து வட்டியில் போடுவது போல் படைத்தாள். இவ்வாறு படைப்பதை ஒவ்வொரு மனையிலும் பெறுவீர்கள்.
செரு செய் முன்பின் குருசில் முன்னிய\nபரிசில் மறப்ப நீடலும் உரியிர்\nஅனையது அன்று அவன் மலை மிசை நாடே
நீங்கள் போராற்றல் மிக்க அரசனாகிய நன்னனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். அவனிடம் பெறவேண்டிய பரிசிலை மறந்துவிட்டு மலைக்குறவர் விருந்தில் மயங்கி அங்கேயே தங்கி விடுதலும் கூடும். அப்படிப் பட்டது நன்னனின் மலைநாடு.
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி\nபுழைதொறும் மாட்டிய இரும் கல் அடாஅர்\nஅரும் பொறி உடைய ஆறே நள் இருள்\nஅலரி விரிந்த விடியல் வைகினிர் கழிமின்
விளைச்சலைப் பாழாக்கும் காட்டுப்பன்றியை அழிப்பதற்காக ஆங்காங்கே கானவர் பொறி வைத்திருப்பர். பெரிய பாறாங்கல்லைத் தூக்கிச் சாய்த்து நிறுத்தி, கவட்டைக் கோலில் குச்சி நிறுத்தி, அந்தக் குச்சியின் ஒரு முனையில் சாய்ந்திருக்கும் கல்லை நிறுத்தி, மற்றொரு முனையில் கயிறு கட்டி, அந்தக் கயிற்றை நிறுத்தி வைத்திருக்கும் கவட்டைக் குச்சியின் அடியில் இரண்டு சுற்று சுற்றி, கயிற்றின் மற்றொரு நுனியை மற்றொரு குச்சியின் ஒரு நுனியில் கட்டி, இந்தக் குச்சியின் மற்றொரு முனையைத் தூக்கி நிறுத்தியுள்ள பாறையில் பொருத்திப் பாறை விழாமல் நிறுத்தியிருப்பர். குச்சியில் காட்டுப்பன்றி விரும்பி உண்ணும் இரையைக் கட்டியிருப்பர். பன்றி இரையை இழுத்ததும் பாறை பன்றியின்மீது விழுந்து பன்றியைக் கொன்றுவிடும். இதற்கு இருங்கல் அடாஅர் என்று பெயர். இரவில் செல்லும்போது அறியாமல் அதில் மோதினால் பொறி வைத்திருக்கும் பாறாங்கல் விழுந்து துன்புற நேரும். எனவே இருள் நீங்கி விடிந்தபின் செல்லுங்கள்.
நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின்\nமுரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில்\nகரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே\nகுறி கொண்டு மரம் கொட்டி நோக்கி\nசெறி தொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச\nவறிது நெறி ஒரீஇ வலம் செயா கழிமின்
மரமடர்ந்த காட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத வழியில் செல்லக் கூடாது. அங்கு வெடிப்பு நிலங்களில் பரல் கற்கள் மூடிய வளைக்குள் பாம்பு இருக்கலாம். பின்னே வருபவர்களுக்கு வழி தெரிவதற்காக மரத்தைக் கல்லால் கொட்டி அடையாளம் செய்து வைத்துவிட்டுச் செல்லுங்கள். அப்படிப்பட்ட இடங்களைக் காணும்போது விறலியர் அதனைச் சுற்றிவந்து வாழ்த்துவர். அவ்வாறு செய்துவிட்டுச் செல்லுங்கள்.
புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்\nஉயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ\nஅகல் மலை இறும்பில் துவன்றிய யானை\nபகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல்\nஇரு வெதிர் ஈர் கழை தத்தி கல்லென\nகரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய\nஉயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன\nவரும் விசை தவிராது மரம் மறையா கழிமின்
விளைநிலங்களில் குறவர்கள் பரண்மீது ஏறி இருந்துகொண்டு விளைச்சலைத் தின்னவரும் யானைகளை ஓட்டக் கவணால் கல் வீசுவர். அதன் தாக்கத்துக்குப் பயந்து, கருமையான விரல்களை உடைய ஊகக் குரங்குகள் மூங்கிலின்மீது தத்திப் பயந்து பாய்ந்தோடும். அந்த விசைக்கல் உங்கள்மீது பட்டால் கூற்றம்போல் உங்கள் உயிருக்கு உலை வைக்கலாம். எனவே அக் காலத்தில் மரமறைவில் செல்லுங்கள்.
உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி\nஇரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்\nகுமிழி சுழலும் குண்டு கய முடுக்கர்\nஅகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை\nவழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி\nபரூஉ கொடி வலந்த மதலை பற்றி\nதுருவின் அன்ன புன் தலை மகாரோடு\nஒருவிர்ஒருவிர் ஓம்பினர் கழிமின்
ஆற்று மடுக்களில் முதலைகள் இருக்கும். ஆழமான அந்த மடுக்களில் நீர்ச்சுழிகள் இருக்கும். மலையில் மர அடர்த்தியால் இரவு போன்ற இருள் இருக்கும். ஆற்றின் ஓரமாகச் சென்றாலும் வழுக்கும் இடங்கள் உண்டு. அங்கெல்லாம் பருமனாக உள்ள கொடிகளைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகளை நடக்க விடாமல் தூக்கிக் கொண்டு ஒருவர் கடந்தபின் மற்றொருவர் என்று செல்ல வேண்டும்.
அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல்\nவிழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா\nவழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி\nஅடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய\nமுழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு\nஎருவை மென் கோல் கொண்டனிர் கழிமின்
சில இடங்களில் வழுக்கும் இடங்களைப் பாசிகள் படர்ந்து மூடிக் கொண்டிருக்கும். வழுக்கி விழுந்தால் ஆழமான மடுவில் விழுந்து ஏற வழியின்றி உயிர் விட நேரும். ஒரு கையில் மூங்கில் கோலும், மற்றொரு கையில் எருவைக் கோலும் ஊன்றிக் கொண்டு செல்ல வேண்டும். (எருவைக்கோல் = பருந்தைப் போல் பற்றிக்கொள்ளும் கோல் - இக்காலத்தில் கால் எலும்பு மருத்துவத்துக்குப் பின் கால் நன்றாகக் கூடும் வரையில் ஊன்றிக்கொண்டு நடப்பதற்குத் தரும் கோல் போன்றது. இது தரையில் ஊன்றும் பகுதியில் பருந்தின் கால்விரல் போல பிளவுகளைக் கொண்டிருத்தலை எண்ணுக.)
உயர் நிலை மா கல் புகர் முகம் புதைய\nமாரியின் இகுதரு வில் உமிழ் கடும் கணை\nதாரொடு பொலிந்த வினை நவில் யானை\nசூழியின் பொலிந்த சுடர் பூ இலஞ்சி\nஓர் யாற்று இயவின் மூத்த புரிசை\nபராவு அரு மரபின் கடவுள் காணின்\nதொழா நிர் கழியின் அல்லது வறிது\nநும் இயம் தொடுதல் ஓம்புமின் மயங்கு துளி
ஓங்கி உயர்ந்த பெரிய கற்பாறை. அங்கே யானைச்சிலை [புகர்முகம்]. இது இந்திரன் முருகனுக்கு வழங்கிய ஐராவதம் என்னும் தெய்வயானைத் தெய்வம் போலும். முருகன் குறிஞ்சிக்கடவுள். அதன் கழுத்தில் மாலை. அம்புகளால் தொடுக்கப்பட்ட மாலை. மழை பொழிவது போன்று அம்புகளால் தொடுக்கப்பட்ட மாலை. அந்த யானைக்குப் பக்கத்தில் இலஞ்சி [பொய்கை]. போர்த்திறம் கற்ற யானை முகத்தில் காணப்படும் சூழி என்னும் முகப்படாம் போல சுடரும் பூக்கள் மலர்ந்திருக்கும் பொய்கை. அது தனித்துச் செல்லும் ஆற்று வழி [இயவு]. அந்த யானைக்கோயிலுக்குச் சுற்றுமதில். மூத்த கற்களை அடுக்கி வைக்கப்பட்டுள்ள மதில். அதற்குள்ளே யானைச்சிலைக் கடவுள். மரபு வழியே தொழப்பட்டுவரும் கடவுள். அதனைக் காணும்பொழுது தொழுதுவிட்டுச் செல்லுங்ககள். அங்கெல்லாம் உங்களது இசைக்கருவிகளை வறிதே கொண்டுசெல்வதைத் தவிர்த்து முழக்கித் தெய்வத்தைப் பரவிவிட்டுச் செல்லுங்கள்.
மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே\nஅலகை அன்ன வெள் வேர் பீலி\nகலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்\nகடும் பறை கோடியர் மகாஅர் அன்ன\nநெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும்\nநேர் கொள் நெடு வரை நேமியின் தொடுத்த\nசூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும்\nஞெரேரென நோக்கல் ஓம்புமின் உரித்து அன்று\nநிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர்
வளம் மிக்க அவன் மலையில் மழை மிகுதியாகப் பொழியும். அப்போதெல்லாம் மயில் கூட்டம், அலகைப் பேய் போல் ஆடும். பறை முழக்கும் கோடியர்களின் சிறுவர்கள் துள்ளி விளையாடுவது போல மூங்கில் கொம்புகளில் ஆண்குரங்குகள் பாய்ந்து விளையாடும். உயர்ந்தோங்கிய மலையில், அச்சம் தரும் பாறை இடுக்குகளில் வண்டிச்சக்கரம் போலத் தேன் கூடு கட்டியிருக்கும். இவற்றைத் திடீரென உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர்த்துவிடுங்கள். இவற்றைப் பார்த்துக் கொண்டே சென்றால், தடுக்கி விழவும், செல்லும் வழி தடுமாறவும் நேரும். எனவே செல்லும் வழியில் கவனம் வைத்துச் செல்லுங்கள்.
வரை சேர் வகுந்தின் கானத்து படினே\nகழுதில் சேணோன் ஏவொடு போகி\nஇழுதின் அன்ன வால் நிணம் செருக்கி\nநிறம் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்\nநெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின்\nஇருள் துணிந்து அன்ன ஏனம் காணின்\nமுளி கழை இழைந்த காடு படு தீயின்\nநளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து\nதுகள் அற துணிந்த மணி மருள் தெள் நீர்\nகுவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி\nமிகுத்து பதம் கொண்ட பரூஉ கண் பொதியினிர்\nபுள் கை போகிய புன் தலை மகாரோடு\nஅற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும்\nஇல் புக்கு அன்ன கல் அளை வதிமின்
கல்லுக் குகையில் மலைப்பாதை [வரைசேர் வகுந்து] வழியே கானகத்தில் செல்லுங்கள். கானவன் கழுது என்னும் பந்தலின்மேல் இருந்துகொண்டு எய்த அம்பு பட்டுக் காட்டுப்பன்றி விழுந்துகிடக்கும். காய்ந்த மூங்கில் உரசித் தானே பற்றி எரியும் காட்டுத்தீ விழுந்துகிடக்கும் காட்டுப்பன்றியை மணம் கமழாமல் சுட்டு வைத்திருக்கும். அதனைத் தூய்மைப் படுத்தி உண்ணுங்கள். அருகில் குவளை பூத்த சுனையில் இருக்கும் தூய்மையான தெளிந்த நீரைப் பருகுங்கள். மீதமுள்ள கறியைப் பொதியாகக் கட்டி எடுத்துச் செல்லுங்கள். பறவைச் சிறகு போல் பறந்து திரியும் மக்களோடு வழியில் தங்காதீர்கள். கற்குகைகளில் வீட்டில் தங்குவது போலப் பாதுகாப்பாகத் தங்குங்கள்.
அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி\nவான்கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து\nகானகம் பட்ட செம் நெறி கொண்மின்
இரவில் நடக்காமல் வெளிச்சம் தெரியும் விடியலில் நல்ல பாதையைப் பார்த்துச் செல்லுங்கள். அல் = இரவு \ எல் = பகல், வான்கண் = வானத்தின் கண்ணாகிய எல்லோன் (சூரியன்)
கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண்\nமைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும்\nதுஞ்சு மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி\nஇகந்து சேண் கமழும் பூவும் உண்டோர்\nமறந்து அமைகல்லா பழனும் ஊழ் இறந்து\nபெரும் பயன் கழியினும் மாந்தர் துன்னார்\nஇரும் கால் வீயும் பெரு மர குழாமும்\nஇடனும் வலனும் நினையினிர் நோக்கி\nகுறி அறிந்து அவையவை குறுகாது கழிமின்
குளம் போன்ற அகன்ற வாயைக் கொண்ட மலைப்பாம்பு யானையின் வலிமையையும் அழிக்க வல்லது. அது தூங்கும் மரம் போலக் கிடக்கும். விலகிச் செல்லுங்கள். கண்ணில் பட்ட பூக்களையெல்லாம் முகராதீர்கள். விழுந்து கிடக்கும் பழங்களையெல்லாம் சாப்பிடாதீர்கள். இடப்புறமும் வலப்புறமும் உள்ள பெரிய மரங்களையும் பூக்களையும் பார்த்துக் கொண்டு வழியைத் தவற விட்டுவிடாதீர்கள்.
பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை\nகாடு காத்து உறையும் கானவர் உளரே\nநிலை துறை வழீஇய மதன் அழி மாக்கள்\nபுனல் படு பூசலின் விரைந்து வல் எய்தி
வெயில் படாத மரமடர்ந்த காடாயினும், மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்திலும் மானைத் தேடிக்கொண்டு குறவர்கள் வில்லும் கையுமாக அலைவர். அவர்களே திசை தடுமாறும் ஞாயிறு தெரியாக் கானகம் அது. அக் குன்றங்களுக்குச் சென்றால் பாறைமீது அமர்ந்துகொண்டு உங்களுடைய இசைக்கருவிகளை முழக்குங்கள் காட்டைக் காப்பாற்றிக்கொண்டு வாழும் கானவர்கள் அங்கெல்லாம் இருப்பார்கள். வழி தவறியவர்களுக்கெல்லாம் உதவ ஓடோடி வருவார்கள். தண்ணீரின் ஓசை போல் பாதுகாப்புக் குரல் கொடுத்துக் கொண்டே உங்களிடம் வந்து சேர்வார்கள்.
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின்\nமலை முழுதும் கமழும் மாதிரம்தோறும்\nஅருவி நுகரும் வான் அரமகளிர்\nவரு விசை தவிராது வாங்குபு குடைதொறும்\nதெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை
குரங்குகள் பலாப்பழங்களைத் தோண்டுவதால் பலாப்பழத்தின் புண் மலை முழுவதும் மணம் வீசிக் கமழும். கொட்டும் அருவியைத் துய்க்கும் வான்-அரமகளிர் நீர் கொட்டும் விசையையெல்லாம் வாங்கிக்கொண்டு நீராடும் ஒலியானது பாணர்கள் தம் இசைக்கருவிகளை முழக்குவது போல் கேட்கும். அரம்பை என்பது வாழைமரம். வாழைமரம் போல் அழகிய தோற்றம் கொண்டவர் அரம்பையர். அரம்பையர் என்போர் அரமகளிர். அரம்பையர் கற்பனைத் தெய்வம். பெண்தெய்வம். இது தமிழ்ச்சொல்.
என்று இ அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி\nஅவலவும் மிசையவும் துவன்றி பல உடன்\nஅலகை தவிர்த்த எண் அரும் திறத்த\nமலை படு கடாஅம் மாதிரத்து இயம்ப\nகுரூஉ கண் பிணையல் கோதை மகளிர்\nமுழவு துயில் அறியா வியலுள் ஆங்கண்\nவிழவின் அற்று அவன் வியன் கண் வெற்பே
இப்படி இந்த மலையோசைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து மலையின் மேல் பகுதியிலிருந்தும், கீழ்ப் பகுதியிலிருந்தும் கேட்டுக்கொண்டிருக்கும். இப்படி அளக்க முடியாத பல ஒலிகளும் கேட்கும். நாலாத் திசைகளிலும் கேட்கும். எந்த ஒலியின் மீது கவனம் செலுத்துகிறார்களோ அந்த ஒலியைப் பல்வேறு ஒலிகளுக்கிடையே கேட்க முடியும். திருவிழாக் காலத்தில் தெருவெல்லாம் முழவோசை கேட்டுக் கொண்டேயிருப்பது போல நன்னன் மலைமீது மலைபடு கடாம் கேட்டுக்கொண்டேயிருக்கும். சிவந்த கண்களோடு பூத் தொடுக்கும் மகளிர் தூங்காமல் இருப்பது போல முழவோசை தெருக்களில் கேட்டுக் கேட்டுக்கொண்டேயிருக்கும். அதுபோல மலைபடு கடாமும் கேட்டுக்கொண்டேயிருக்கும். இந்த ஓசைகள்தாம் மலைபடுகடாம்.
மை படு மா மலை பனுவலின் பொங்கி\nகை தோய்வு அன்ன கார் மழை தொழுதி\nதூஉ அன்ன துவலை துவற்றலின்\nதேஎம் தேறா கடும் பரி கடும்பொடு\nகாஅய் கொண்ட நும் இயம் தொய்படாமல்\nகூவல் அன்ன விடரகம் புகுமின்
பூரித்திருக்கும் பஞ்சைப் போல மேகங்கள் மலைமேல் மேயும். துவலைத் தூறல்கள் கை ஈரம் படத் தூறிக்கொண்டேயிருக்கும். செல்லவேண்டிய இடங்கூடத் தெரியாது. அப்போது நீங்கள் இசைக் கருவிகளில் பண் பாட முடியாது. எனவே கைகளும், கருவிகளும் காய்வதற்காகவும் இசைக்கருவிகள் ஈரம் படாமல் இருப்பதற்காகவும் கூவல் குடிசை போன்ற பாறை வெடிப்புக் குகைக்குச் சென்று தங்குங்கள்.
உரை செல வெறுத்த அவன் நீங்கா சுற்றமொடு\nபுரை தவ உயரிய மழை மருள் பல் தோல்\nஅரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய\nபின்னி அன்ன பிணங்கு அரில் நுழைதொறும்\nமுன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல்\nஇன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி\nமண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி\nகை பிணி விடாஅது பைபய கழிமின்
கொடிகள் பின்னிக் கிடக்கும் பிணங்கர் காட்டில் நுழையும்போது ஒருவரோடு ஒருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்லச் செல்லுங்கள். அந்த பிணங்கர்க் காடு அரசன் படையில் முன்னே செல்லும் தோல் படையையே நிலைகலங்கச் செய்ய வல்லவை. முன்னே செல்பவன் தன் அம்பால் தன்மேல் மோதும் முள்ளை ஒதுக்கிப் பிடித்துக்கொண்டு செல்வான். தான் கடந்ததும் அதை விட்டுவிடுவான். அது பின்னே வருபவர்மேல் மோதித் தாக்கும். உங்களின் யாழ், பத்தர், முழவு போன்ற இசைக் கருவிகள் மீதும் மோதித் தாக்கும். எனவே அவற்றையும் பாதுகாத்துக் கொண்டு கவனமாகச் செல்லுங்கள். அரசன் நன்னனின் சுற்றம் பலரும் புகழக் கேட்டுக் கேட்டு புகழையே வெறுத்திருந்தது. இங்குச் சுற்றம் என்பது படை. அது அவனை விட்டு அகலாமல் பாதுகாப்பாக இருந்துவந்தது.
இன்பு உறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக\nதொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனைமின்\nபண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர்\nசந்து நீவி புல் முடிந்து இடுமின்
உங்களுக்கு விருப்பமான யாழை மீட்டிப் பாடிக்கொண்டும், மகிழ்ச்சிப் பெருக்கில் வழக்கம் போல் கொம்புகளை ஊதிக்கொண்டும் செல்லுங்கள். முன்பு நீங்கள் அறியாத புதிய வழியில் செல்லும்போது வழியிலுள்ள முட்புதர்களை வெட்டித் தூய்மைப் படுத்திக்கொண்டு செல்லுங்கள். அடுத்து வருபவர்களுக்கு வழி காட்டுவதற்காகக் கல்லிலே புல்லை முடிந்து ஆங்காங்கே வைத்து அடையாளம் செய்துகொண்டு செல்லுங்கள்.
செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறிமார்\nகல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த\nகடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை\nஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர்\nசுட்டினும் பனிக்கும் சுரம் தவ பலவே
இப்பாதை எந்த ஊருக்குச் செல்கிறது என்பதை மரத்தில் கல்லால் கொட்டி எழுதி வைத்திருந்தனர். பாதைகள் பிரியும் சந்தியின் நடுவில் கைகாட்டி மரங்கள் மட்டும் அல்லாமல் பலரும் போற்றிப் புகழும் கடவுளைச் செதுக்கிய காட்டு மரங்களும் இருந்தன. அவற்றின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே பகைவர்கள் நடுங்குவர். இப்படிப்பட்ட காட்டுப் பாதைகள் பல இருந்தன.
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி\nகலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து\nசிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை\nதலை இறும்பு கதழும் நாறு கொடி புறவின்\nவேறு புலம் படர்ந்த ஏறு உடை இனத்த\nவளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர்\nவளையோர் உவப்ப தருவனர் சொரிதலின்\nபலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும்\nபுலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர்
கானத்தில் கலை - பெண் மானைப் புலி தாக்கிக் கொன்று விட்டது. ஆண்மான் தன் பெண்மானை நினைத்துக் கொண்டே தவித்தது. இது ஒரு புறம். மரைவிடை - கானவன் தன் வில்லில் நாணைத் தெரித்துச் சரிபார்த்துக் கொண்டிருந்தான். அந்த ஒலியைக் கேட்ட காட்டாட்டுக் கடா தன் இனத்தைக் கூட்டிக்கொண்டு வேறு காட்டுக்கு ஓடியது. ஆவின் பால் - கோவலன் தான் வளைத்து வைத்திருக்கும் பசுக்களின் பாலைக் கறந்து கொண்டு வந்து தன் மனைவியின் கலத்தில் ஊற்றுவான். அதனை அவள் உங்களுக்கு விருந்தாக அளிப்பாள். அதனால் தெம்பு பெற்ற நீங்கள் வருத்தம் நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள்.
கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின்\nகொடு வில் கூளியர் கூவை காணின்\nபடியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை\nகொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே\nதடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ\nஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை\nஆங்கு வியம் கொண்மின் அது அதன் பண்பே
கூளியர் அம்பு விட்டால் கூப்பிடு தூரம் சென்று இலக்கைச் சரியாகத் தாக்கும். அவர்கள் வாழும் கூவைக் குடிசைகளைக் கண்டால், நன்னனைப் பார்க்கச் செல்கிறோம் என்று சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்குப் பாதுகாப்புத் தருவார்கள். யாரும் உங்களிடம் குறும்பு செய்ய மாட்டார்கள். சமைத்த கிழங்கும், புலால் கறியும் எல்லாருடைய வீட்டிலிருந்தும் வாங்கிவந்து உண்ணத் தருவார்கள். நன்னன் உலகிலுள்ள பகைவர் அனைவரையும் நெருஞ்சி முள்ளைத் தேய்ப்பது போல் காலால் தேய்த்துப் போட்டவன். பணியாத ஆளுமைத் திறம் பெற்றவன். நில மடந்தையின் கணவன்.
தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும்\nஉம்பல் அகைத்த ஒண் முறி யாவும்\nதளிரொடு மிடைந்த காமரு கண்ணி\nதிரங்கு மரல் நாரில் பொலிய சூடி\nமுரம்பு கண் உடைந்த நடவை தண்ணென\nஉண்டனிர் ஆடி கொண்டனிர் கழிமின்
முருகனுக்குச் சூட்டும் வெண்கடம்பப் பூவையும், மேட்டு நிலங்களில் பூத்த பல்வேறு தளிர்களையும் சேர்த்து மரல் நாரில் கட்டித் தலையில் சூடி அழகு படுத்திக் கொள்ளுங்கள். முரம்பு நிலம் கண் உடைந்து அதில் ஊற்றாக வந்து நடந்தோடும் நீரில் விளையாடுங்கள். அது ஊற்றெடுக்கும் பகுதியிலுள்ள நீரைப் பருகுங்கள். தொடர்ந்து செல்லுங்கள்.
செவ்வீ வேங்கை பூவின் அன்ன\nவேய் கொள் அரிசி மிதவை சொரிந்த\nசுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ்\nஅற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட\nஅகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய\nபுல் வேய் குரம்பை குடிதொறும் பெறுகுவிர்
வேங்கைப் பூ சிவப்பாக மலரும். வெந்தால் அதுபோல் மலரக்கூடியது மூங்கில் அரிசிச் சோறும், நன்செய் அல்லாத புன்செய் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லஞ்சோறும் ஆகும். அந்தச் சோற்றுக்கு அவரைக்காய்ப் புளிக்குழம்பு. தெருக்களில் மூங்கில் கழிகளின்மேல் புல்லால் வேய்ந்த குடிசை. அந்தக் குடிசைகளில் எல்லாம் அந்த அவரைக்காய்ப் புளிக்குழம்புச் சோற்றை நடந்துவந்த களைப்புத் தீரப் பெறலாம்.
புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின்\nமெல் அவல் இருந்த ஊர்தொறும் நல் யாழ்\nபண்ணு பெயர்த்து அன்ன காவும் பள்ளியும்\nபல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும்\nநன் பல உடைத்து அவன் தண் பணை நாடே
காவிலும் களத்திலும் யாழிசை மீட்டிக்கொண்டு ஆங்காங்கே பலநாள் தங்கியும் செல்லலாம்.- புல்லைப் போல் வேர் பிரியும் அடிமரத்தைக் கொண்டது காஞ்சிமரம். அதில் ஆற்றுப்புனல் பாய்ந்து பாதி வேரை அரித்து விட்டது. மீதி பாதி வேர் மேட்டுநிலத்தில் பிடித்துக் கொண்டு நின்றது. அது போல் மரம்கொண்ட ஊர்கள் பல. அந்த ஊர்களில் சீரிய யாழ்ப்பண்ணைப் போல் ஒலி தரும் காடுகள் பல. பள்ளிகளிலும் அந்த ஒலி. பல நாள் அங்குத் தங்கினாலும், அந்த ஊருக்குப் போனவுடனேயே சென்று விட்டாலும் நன்னன் வளவயல் நாட்டில் பெறும் நன்மைகள் பலப்பல.
கண்பு மலி பழனம் கமழ துழைஇ\nவலையோர் தந்த இரும் சுவல் வாளை\nநிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில்\nபிடி கை அன்ன செம் கண் வராஅல்\nதுடி கண் அன்ன குறையொடு விரைஇ\nபகன்றை கண்ணி பழையர் மகளிர்\nஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த\nவிலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ\nவளம் செய் வினைஞர் வல்சி நல்க\nதுளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல்\nஇளம் கதிர் ஞாயிற்று களங்கள்தொறும் பெறுகுவிர்
பழனம் - பழமையான வளவயல் பகுதிகளிலெல்லாம் மீன் வாடை வீசும். வலையோர் - பழனங்களில் வாளை மீனை வலை போட்டுப் பிடித்து வருவார்கள். நிலையோர் - வரால் மீனைத் தூண்டில் போட்டுப் பிடித்து வருவார்கள். இந்த வரால் மீன் யானையின் துதிக்கை போல உருவம் கொண்டிருக்கும். பழையர் மகளிர் - வாளை மீன்களைத் துடியின் வாய் போல் நறுக்கி, வயலில் பிடித்து வந்த நண்டையும் சேர்த்துச் சமைப்பார்கள். சமைத்த அந்தக் குழம்பைத் ‘தராய்’ என்னும் தூக்குப்பாத்திரத்தில், வைக்கோல் போரின் ஓரத்தில் வைத்துக்கொண்டு வழங்குவார்கள். வளஞ்செய் வினைஞர் (உழவர்) - மலைபோல் குவித்து நெல்லை [வல்சி என்னும் உணவுப்பண்டம்] அடித்துக் கொண்டு வந்து நல்குவார்கள். பசும்பொதித் தேறல் - உழவர் மகளிர் வடித்த பச்சரிசிக் கஞ்சியைப் பதப்படுத்திய தேறலைத் தருவார்கள். இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கள் - வெயில் இளகிய காலையிலும், மாலையிலும் வயலில் உள்ள போர்களங்களில் சொம்பு சொம்பாக [தசும்பு] இவற்றைப் பெறலாம்.
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ\nசெம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்\nகனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி\nவனை கல திகிரியின் குமிழி சுழலும்\nதுனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்\nகாணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்\nயாணர் ஒரு கரை கொண்டனிர் கழிமின்
நெல் அறுக்கும் உழவர்கள் தண்ணுமை முரசை முழக்கிவர். அந்த ஒலியைக் கேட்டு எருமைக் கடா தன் இனத்தை விட்டுவிட்டுப் பிரிந்து ஓடும். கனைத்துக் கொண்டு, தன் வலிமையைக் காட்டும் சினத்தோடு சேயாற்றுக்குள் இறங்கும். அங்கே அந்த எருமைக்கடா நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டு சுழலும். குயவன் பானை வனையும்போது சக்கரத்தில் பானை சுழல்வது போலச் சுழலும். வெள்ளம் வேகமாகப் பாயும். அப்போது அது மதகை அடைத்து வைக்கும் ஓப்பலகை இடுக்குகளில் பீரிட்டுக் கொண்டு பீச்சும். இதனைக் கண்டவர்கள் மீண்டும் காண ஆசைப்படும்படி கண்ணுக்கு இனிமையாக இருக்கும். பார்த்துக் கொண்டே சேயாறு ஆற்றங்கரையில் செல்லுங்கள்.
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்\nபதி எழல் அறியா பழம் குடி கெழீஇ\nவியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து\nயாறு என கிடந்த தெருவின் சாறு என\nஇகழுநர் வெரூஉம் கவலை மறுகின்\nகடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு\nமலை என மழை என மாடம் ஓங்கி\nதுனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும்\nபனி வார் காவின் பல் வண்டு இமிரும்\nநனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர்
வரைப்பு என்னும் ஊர் - செங்கண்மா என்பது சேயாற்றின் கரையில் உள்ளதோர் ஊர். அங்குப் பயன்படுத்திய செல்வம் போக மிஞ்சியிருக்கும் செல்வம் கேட்பாரற்றுத் தூங்கிக் கிடக்கும். குடிமக்கள் - குடிமக்கள் அந்த ஊரை விட்டு வெளியூர் செல்லாமல் பழமையான குடிமக்களாகவே வாழ்வர். நியமம் - காலியிடம் இல்லாமல் நெருக்கமாகக் கட்டப்பட்ட வீடுகளுடன் அதன் கடைவீதி அமைந்திருக்கும். தெரு - நீரோடும் ஆறுபோல் மக்கள் நடமாடும் தெருக்கள் அமைந்திருக்கும். அந்த ஊரைக் காண்பதற்கு முன்னர், அதனை இகழ்ந்து பேசியவர்கள் மக்கள் வெள்ளத்தைப் பார்த்து வியப்படைவர். கவலை மறுகு - சந்திகள் உள்ள குறுந்தெருக்களில் மக்களின் ஆரவாரம், கடலொலி போலவும், இடிமுழக்கம் போலவும் கேட்டுக்கொண்டேயிருக்கும். மாடம் - மலைபோல் மழைமேகத்தைத் தொடும் அளவு ஓங்கியிருக்கும். பனிவார்கா - ஊரைச் சுற்றியுள்ள காட்டில் பனி பொழிந்துகொண்டேயிருக்கும். பனித்துளி நீர்மூட்டம் அக் காட்டின்மீது ஊடல் கொண்டு ஒட்டுறவாடுவது போல் இருக்கும். வண்டினங்கள் - பனி பொழியும் அந்தக் காட்டில் பல்வேறு வண்டினங்களின் ஒலி கேட்டுக் கொண்டிருக்கும். நன்னன் அரண்மனை - அந்த இடத்துக்குச் சென்று விட்டால், நன்னன் அரண்மனை அங்கிருந்து அதிக தொலைவில் இல்லை என்று உணர்ந்து கொள்ளுங்கள். அண்மையில் தான் உள்ளது.
பொருந்தா தெவ்வர் இரும் தலை துமிய\nபருந்து பட கடக்கு ஒள் வாள் மறவர்\nகரும் கடை எஃகம் சாத்திய புதவின்\nஅரும் கடி வாயில் அயிராது புகுமின்
படைக் கொட்டிலில் வாளும் வேலும் தாறுமாறாகச் சாத்தப் பட்டிருக்கும். அவை நன்னனின் மறவர்கள் பருந்துகள் பின்தொடரப் பகைவர் தலைகளைத் துண்டாக்கியவை. அவற்றைக் கண்டு சோர்ந்து விடாமல் கோட்டை வாயிலைக் கடந்து உள்ளே செல்லுங்கள்.
பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட\nஎரி கான்று அன்ன பூ சினை மராஅத்து\nதொழுதி போக வலிந்து அகப்பட்ட\nமட நடை ஆமான் கயமுனி குழவி\nஊமை எண்கின் குடா அடி குருளை\nமீமிசை கொண்ட கவர் பரி கொடும் தாள்\nவரை வாழ் வருடை வன் தலை மா தகர்\nஅரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை\nஅளை செறி உழுவை கோளுற வெறுத்த\nமட கண் மரையான் பெரும் செவி குழவி
நன்னன் அரண்மனை வாயிலில் அவன் நாட்டு மலைமக்கள் கொண்டு வந்து குவிக்கும் பொருள்கள் பல. அவற்றை நீங்கள் உங்களது வழிநடை வருத்தம் நீங்க வேடிக்கைப் பார்க்கலாம். அவற்றோடு விளையாடித் திளைக்கலாம். ஆமான் - விளக்கு எரிவது போலப் பூத்திருக்கும் மரா மரத்தடியில் கூடி விளையாடிய பசுவைப் போன்ற பெரிய மான்களின் தொகுதி வேறிடம் சென்ற போது திக்குத் தெரியாமல் நின்றுவிட்ட தனிமான். கயமுனி - குட்டி யானை. எண்கின் குருளை - வட்ட அடியையுடைய வாய் பேசாத கரடிக் குட்டி. வருடை - பிளவு பட்ட அடி கொண்ட மலையாட்டின் கடா. தீர்வை - படமெடுத்தாடும் நல்ல பாம்பைப் பிடித்துண்ணும் கருடன். உழுவை - குகையில் வாழும் புலி. மரையான் - புலியிடம் தப்பிய காட்டுப் பசுவின் கன்று.
வானத்து அன்ன வளம் மலி யானை\nதாது எரு ததைந்த முற்றம் முன்னி
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு வாயில் பகுதியிலேயே நின்றுவிடாதீர்கள். முற்றத்துக்கு வாருங்கள். அங்கே வானம் போல் உயர்ந்ததாய் யானை நிற்கும். அதன் எரு வளம் மலிந்ததாய்க் கிடக்கும்.
விருந்தின் பாணி கழிப்பி நீள்மொழி\nகுன்றா நல் இசை சென்றோர் உம்பல்\nஇன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப\nஇடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென\nகொடை கடன் இறுத்த செம்மலோய் என
கொடைக்கடன் தீர்க்கும் செம்மலோய் - என்று பாடும்போது … விருந்திற்பாணி - அரசனை வாழ்த்திப் பாடத் தொடங்குவதற்கு முன் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் புதிய பண்ணிசைப் பாடல்களைப் பாடுங்கள். பின்னர் நன்னனை வாழ்த்துங்கள். உலகில் அழியாத புகழை நிலைநாட்டி விட்டுச் சென்ற அரசர்கள் பலரின் வழிவந்தவன் நீ என்றாலும், அவர்களுக்குள் நீ யானை போன்றவன். வல்லவர்களிடையே வறுமையில் வாடும் நல்லவர் யார் என்று தெரிந்துணரும் பெரியோர்கள் பலர் இன்று இந்த உலகத்தில் வாழ்வு முடிந்து உலகின் பொது நியதியாகிய இறப்பைத் தழுவி நிற்கிறார்களே என்று எண்ணி கொடைக் கடமையை நீயே எடுத்துக்கொண்டு செம்மாந்து நிற்கும் செம்மலோய் ! என்றெல்லாம் நீங்கள் அவனைப் பாராட்டிக்கொண்டிருக்கும்போதே, ......
பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து\nதிரு நகர் முற்றம் அணுகல் வேண்டி\nகல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ
வந்ததே போதும் - என்று சொல்லி அழைத்துச் சென்று தன் சுற்றத்தாரோடு அமர்த்திக்கொள்வான். சுற்றத்தாரின் வலப்புறம்- மேலே சொன்னவாறெல்லாம் நன்னனின் வெற்றிப் புகழை அவனது பெருமையோடு சேர்த்துப் பாடுங்கள். நீங்கள் அவனிடம் எதற்காகச் சென்றீர்கள் என்று சொல்வதற்கு முன்னரே அவன் உங்களின் கருத்தை அறிந்தவனாகப் பேசத் தொடங்கி விடுவான். நீங்கள் என்னிடம் வந்ததே போதும். உங்கள் வருத்தம் பெரிது என நான் அறிவேன். - என்பான். போரிட வந்த எதிரிகளை எதிர்கொள்ளப் போர்வீரர்களோடு சென்ற அவன் தன் அரண்மனை முற்றத்தில் தங்கச் செய்வதற்காகத் தன் சுற்றத்தாரை அழைத்து அவர்களிடம் உங்களை ஒப்படைப்பான். உங்களை அவர்களுக்கு வலப்புறம் இருக்கச் செய்வான்.
உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து\nஅகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து\nஇலம் என மலர்ந்த கையர் ஆகி\nதம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்\nநெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி\nகடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று\nவடு வாழ் எக்கர் மணலினும் பலரே
தம் பெயரைத் தம்மோடு கொண்டுசென்ற மக்கள் சேயாற்று மணலைக்காட்டிலும் பலர். நன்னன் சேயாற்று வெள்ளம் போலப் பயன்படுபவன். பல அரசர்கள் உயர்ந்த அரியணையில் வீற்றிருப்பர். தம்மோடு உருமுதல் இல்லாத உரிமைச் சுற்றத்தோடு வீற்றிருப்பர். மிக விரிவான ஆட்சிப் பரப்பைக் கொண்டிருப்பர். ஆனால் அவர்களது அறிவு நுட்பம் சுருங்கியதாக இருக்கும். இல்லை இல்லை என்று சொல்லி எப்போதும் கையேந்திக் கொண்டும், இருப்பதைக் கூடத் தராமல் கையை விரித்துக் கொண்டும் வாழ்வார்கள். இப்படிப்பட்டவர்கள் நன்னன் நாட்டில் ஓடும் சேயாற்று மணலின் எண்ணிக்கையைவிட மிகுதியானவர்கள். சேயாற்று வெள்ளம் உயர்ந்த மலைகளிலிருந்து இறங்கி வரும். வயல்களில் பாய்ந்து கலங்கலாகி மீண்டும் ஆற்றில் விழும். இப்படி கண்ணுக்கு இனிமையாக இருக்கும். (நன்னன் சேயாற்று வெள்ளம் போன்றவன் - என்பது கருத்து.)
இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம்\nஎள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ\nமுடுவல் தந்த பைம் நிணம் தடியொடு\nநெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது\nதலை நாள் அன்ன புகலொடு வழி சிறந்து\nபல நாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது\nசெல்வேம் தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என\nமெல்லென கூறி விடுப்பின் நும்முள்
உடுக்க ஆடை, உண்ணக் கறிச்சோறு பலநாள் தங்கினும் தருவான். இப்படித்தான் நன்னன் விருந்து இருக்கும். புத்தாடை - இழை தெரியாத மெல்லிய நூலால் உடல் தெரியாத அளவுக்கு நெருக்கமாக நெய்யப்பட்ட , பழிக்க முடியாத அளவுக்கு மிகவும் சிறப்பினைக் கொண்ட புத்தாடையை முதலில் அணிந்துகொள்ளச் செய்வான். (வெள் அரை = அரைகுறையாக ஆடை உடுத்திக் கொண்டிருந்த இடை) விருந்து - முடுவல் என்னும் வேட்டை நாய் முடுக்கித் தான் கொண்டுவந்த விலங்கினக் கறியோடு நீண்ட அரிசியைக் கொண்ட நெல்லஞ் சோற்றை விருந்தாகப் படைப்பான். பலநாள் தங்கினாலும் முதல் நாளில் காட்டிய அதே விருப்பத்தோடு வழங்குவான். செல்வேம் தில்ல - நாங்கள் எங்கள் பழைய ஊருக்குச் செல்ல விரும்புகிறோம் - என்று மெல்ல, செய்தி சொல்லி அனுப்பினால் போதும். அவன் முந்திக் கொள்வான்.
ஓங்கு திரை வியன் பரப்பின்\nஒலி முந்நீர் வரம் பாகத்\nதேன் தூங்கும் உயர் சிமைய\nமலை நாறிய வியன் ஞாலத்து\nவல மாதிரத்தான் வளி கொட்ப\nவிய னாண்மீ னெறி யொழுகப்\nபகற் செய்யும் செஞ் ஞாயிறும்\nஇரவுச் செய்யும் வெண் திங்களும்\nமை தீர்ந்து கிளர்ந்து விளங்க\nமழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத்\nதொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய\nநிலனு மரனும் பயன்எதிர்பு நந்த\nநோ யிகந்து நோக்கு விளங்க
பொங்கி அலைவீசும் பரப்பினைக் கொண்டது கடல். அதனை எல்லையாகக் கொண்ட ஞாலத்தில் தேன்கூடுகள் தொங்கும் உயர்ந்த முகடுகளைக் கொண்ட மலைகள் தோன்றியுள்ளன. வானப் பெருவெளியில் காற்று வலிமையுடன் சுழன்று கொண்டுள்ளது. எல்லாவற்றையும் விடப் பெரிதாக அகன்றுள்ள விண்மீன்கள் தத்தம் வழியில் செல்கின்றன. பகலில் ஒளிதரும் ஞாயிறு இரவில் ஒளிதரும் திங்கள் ஆகிய இரண்டும் மயக்கமின்றித் தோன்றி ஒளிர்கின்றன. மழை பொழிந்தது. மாநிலம் கொழுத்துள்ளது. ஒன்று விதைத்தால் அது ஆயிரமாக விளைகிறது. விதைத்த நிலமும் விதைக்காத மரங்களும் நல்ல பலனைத் தருகின்றன. இப்படி இயற்கை உதவுவதால் மக்களின் நோக்கத்திலும் துன்பத்தைக் காண முடியவில்லை. யாரும் துன்பம் செய்யவில்லை.
மே தக மிகப் பொலிந்த\nஓங்கு நிலை வயக் களிறு\nகண்டு தண்டாக் கட்கின் பத்து\nஉண்டு தண்டா மிகுவளத் தான்\nஉயர் பூரிம விழுத் தெருவிற்\nபொய் யறியா வாய்மொழி யாற்\nபுகழ் நிறைந்த நன்மாந்த ரொடு\nநல் லூழி அடிப் படரப்\nபல் வெள்ளம் மீக் கூற\nஉலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக
கண்டு மாளாத களிறு. அக் களிறு உண்டு மாளாத வளம். தெருவெங்கும் பூரிப்பு. பொய் பேசத் தெரியாமல் உண்மையே பேசும் மக்கள். அவர்கள் உலகம் புகழும் நன்மக்கள். இப்படிப்பட்ட மக்கள் வாழும் நல்ல ஊழிக்காலம் வெள்ளம் என்னும் எண்ணளவினைக் கொண்ட ஊழிக்காலம். மக்கள் தன் காலடியைப் பற்றிக்கொண்டு பின்தொடரும்படி வெள்ளம் (கோடி கோடி) ஆண்டுகள். கோடிகோடி () ஆண்டுகள் ஆண்டுவந்த பாண்டியரின் வழித்தோன்றலாக விளங்கும் மருகனே! (தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனே!)
பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்\nநிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர் இணை\nயொலியிமிழ் துணங்கைச் சீர்ப்\nபிணை யூபம் எழுந் தாட\nஅஞ்சு வந்த போர்க்களத் தான்\nஆண் டலை அணங் கடுப்பின்\nவய வேந்தர் ஒண் குருதி\nசினத் தீயிற் பெயர்பு பொங்கத்\nதெற லருங் கடுந் துப்பின்\nவிறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்\nதொடித் தோட்கை துடுப் பாக\nஆ டுற்ற ஊன் சோறு\nநெறி யறிந்த கடிவா லுவன்\nஅடி யொதுங்கிப் பிற் பெயராப்\nபடை யோர்க்கு முரு கயர\nஅமர் கடக்கும் வியன் றானைத்\nதென்னவற் பெயரிய துன்னருந் துப்பின\nதொல்முது கடவுட் பின்னர் மேய\nவரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந
(பாண்டியன் நெடுஞ்செழியன் குற்றால மலைப் போரில் வென்று அதனைத் தனதாக்கிக் கொண்டான். அங்கு நடைபெற்ற போர் இப்பகுதியில் பேசப்படுகிறது) வரைதாழ் அருவி என்பது குற்றாலம். அங்கு இக்காலத்தில் உள்ள இரத்தின சபையில் தென்திசை நோக்கிக் கூத்தாடுபவர் தென்திசைக் கடவுள் (தட்சிணாமூர்த்தி). தென்திசைக் கடவுளைத் ‘தென்னவன்’ என்றனர். தென்னவனைத் ‘தொன்முது கடவுள்’ எனவும் வழங்கினர். (குற்றாலம் பொதியமலையின் ஒரு பகுதி. இப்பகுதியை வள்ளல் ஆய் ஆண்டு வந்தான் என்பதைச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன) பிற்காலத்துப் பரணி நூல்கள் போர்க்களக் காட்சியைப் பாடும்போது பிணத்தைப் பேய்க்கூட்டம் சோறாக்கித் தின்றதாகப் பாடுகின்றன. அவற்றிற்கு முன்னோடி போல அமைந்துள்ளது இந்தப் பாடல் பகுதி. பிணமாகிய களிறுகளைக் குவித்துப் கொழுப்பை எடுத்துப் பேய்க்கூட்டம் வாயில் அதவியது. பின்னர் தோளில் கை கோத்துக்கொண்டு ஒன்றன்மேல் ஒன்று விழுந்து தூண் போல் நின்று போர்க்களத்தில் துணங்கைக் கூத்து ஆடியது. ஆண்களின் தலைகளைக் கல்லாக வைத்து அடுப்புக் கூட்டியது. அரசர்களின் குருதியை உலைநீராக ஊற்றியது. அரசர்களின் சினத்தைத் தீயாக மூட்டியது. வலிமை மிக்க அவர்களின் கைகளை முறித்துத் துடுப்பாக்கிக்கொண்டு சோற்றைத் துளாவியது. பிணக் கறி போட்டுச் சோறு சமைத்தது.. சமையல் தொழிலில் வல்ல வாலுவன் விலகிச் சென்றுவிட்டான். இது படையினரை ஆட்டுவிக்கும் ‘முருகு’ ஆட்ட விழா. இப்படிப் போரிட்டு, தென்னவன் பெயர் கொண்ட கடவுளின் அருவி பாயும் நாட்டை இந்தச் செழியன் தனதாக்கிக்கொண்டான்.
விழுச் சூழிய விளங்கோ டைய\nகடுஞ் சினத்த கமழ்கடா அத்து\nஅளறு பட்ட நறுஞ் சென்னிய\nவரை மருளும் உயர் தோன்றல\nவினை நவின்ற பேர் யானை\nசினஞ் சிறந்து களனு ழக்கவும்\nமா வெடுத்த மலிகுரூஉத் துகள்\nஅகல் வானத்து வெயில் கரப்பவும\nவாம் பரிய கடுந்திண் டேர்\nகாற் றென்னக் கடிது கொட்பவும்\nவாள் மிகு மற மைந்தர்\nதோள் முறையான் வீறு முற்றவும்\nஇருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்\nபொரு தவரைச் செரு வென்றும்
யானைப்படை - போர் யானையின் முன்தலைக் கொண்டையில் முகப்படாம் என்னும் சுழி தொங்கியது. சினம் மிகுதியால் ஒழுகும் மதம் கமழ்ந்து கொண்டிருந்தது. பகைவர்களோடு மோதி அதன் தலை குருதியால் சேறுபட்டிருந்தது. யானை மலைபோல் உயர்ந்த தோற்றத்தைக் கொண்டிருந்தது. போர்த் தொழிலைப் பிற யானைகளுக்குக் கற்றுத் தரும் பாங்கினைக் கொண்டது செழியனின் யானை. படைகளை அது காலால் துவட்டியது. மா - இதன் ஓட்டத்தால் எழுந்த செம்புழுதி வானத்து வெயிலை மேகம்போல் மறைத்தது. தேர் - குதிரை பூட்டிய தேர் காற்றைப்போல் சுழன்றது. மைந்தர் - வாளேந்திய இளம் வீரர்கள் தம் தோள் வலிமையைப் பெருமிதத்துடன் காட்டினர். இப்படிப்பட்ட நாற்படையின் துணைகொண்டு நெடுஞ்செழியன் சேர சோழரையும் வேளிரையும் வென்றான்.
இலங் கருவிய வரை நீந்திச்\nசுரம் போழ்ந்த இக லாற்றல்\nஉயர்ந் தோங்கிய விழுச் சிறப்பின்\nநிலந் தந்த பே ருதவிப்\nபொலந்தார் மார்பி னெடியோன் உம்பல்
உம்பல் என்பது யானை. நெடியோனின் வழித்தோன்றலாக வந்த உம்பல் நெடுஞ்செழியன். நெடியோன் அருவி பாய் மலையைக் கடந்து சென்றான். பாலை நிலத்தையும் கடந்து சென்றான். அப்போது தன்னோடு மாறுபட்டவர்களைத் தன் ஆற்றல் மிகுதியால் வென்றான். தோற்றவர்கள் தம் நிலப்பகுதியை நெடியோனுக்குக் கொடுத்தனர். அதனை அவன் தனதாக்கிக் கொள்ள வில்லை. மாறாக அவர்களின் நாட்டை அவர்களுக்கே திருப்பிக் கொடுத்து விட்டான். இது ‘நிலம் தந்த பேருதவி’. இதனை ‘நிலந்தரு திரு’ என்றனர். ‘திரு’ என்பது பெருமை. வென்ற நிலத்தைத் தோற்றுப்போன உடையாளி அரசனுக்கே திருப்பித் தந்த நெடியோன் இவன். இந்தப் பாண்டிய அரசன் நெடியோன் தான் வென்ற நாட்டைத் தன்னிடம் தோற்ற அரசனுக்கு உதவியாக அமையும்படி திருப்பித் தந்ததால் அது ‘பேருதவி’ என்று போற்றப்பட்டது. நிலமளந்த நெடியோனின் திருவைவிட, நிலம் தந்த பேருதவியாகிய திரு மேலானதாகையால் இப் பாண்டியன் ‘நிலந்தரு திருவின் நெடியோன்’ என்று போற்றப்படுகிறான் இவன் வழி வந்த யானைக் குட்டிதான் இப் பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியன். நிலமளந்த நெடியோன் - மாபலியின் கொடையைக் கொன்று, அவனது மூவுலகையும் தனதாக்கிக் கொண்டான்.
மரந் தின்னூஉ வரை யுதிர்க்கும்\nநரை யுருமின் ஏற னையை\nஅருங் குழுமிளைக் குண்டுக் கிடங்கின்\nஉயர்ந் தோங்கிய நிரைப் புதவின்\nநெடு மதில் நிரை ஞாயில்\nஅம் புமிழ் அயி லருப்பந்\nதண் டாது தலைச் சென்று\nகொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
இடியானது, பச்சை மரங்களை எரித்துத் தின்று பட்ட மரங்களாக்கும். பாறையாக உள்ள மலைகளையும் உதிரச் செய்யும். அதுபோல நெடுஞ்செழியன் பகைவர் பலரது கோட்டைகளைத் தகர்த்தான். பகைவரின் கோட்டை கடத்தற்கரிய காவற்காடுகளுக்கு இடையே இருந்தது. ஆழமான அகழிகள், மிக உயரத்தில் வீரர்கள் பதுங்கிக் கொள்ளும் புதவு, நீண்ட மதில், படைக்கருவிகளைப் பாதுகாக்கும் ஞாயில், மறைந்திருந்து அம்பெய்யவும் வேல் வீசவும் உதவும் அருப்பம் முதலானவற்றைக் கொண்டிருந்தது, பகைவரின் கோட்டை. இப்படிப்பட்ட இடங்களிலெல்லாம் நெடுஞ்செழியனின் படை தடையின்றி உள்ளே சென்று கோட்டையைத் தனதாக்கிக் கொண்டது. இது அவனது விழுமிய சிறப்புகளுள் ஒன்று.
வானி யைந்த இரு முந்நீர்ப்\nபேஎம் நிலைஇய இரும் பெளவத்துக்\nகொடும் புணரி விலங்கு போழக்\nகடுங் காலொடு கரை சேர\nநெடுங் கொடிமிசை இதை யெடுத்து\nஇன் னிசைய முரச முழங்கப\nபொன் மலிந்த விழுப் பண்டம்\nநா டார நன் கிழிதரும்\nஆடி யற் பெரு நாவாய்\nமழை முற்றிய மலை புரையத்\nதுறை முற்றிய துளங் கிருக்கைத்\nதெண் கடற் குண் டகழிச்\nசீர் சான்ற உயர் நெல்லின்\nஊர் கொண்ட உயர் கொற்றவ
‘நெல்லின் ஊர்’ என்பது சாலியூர். நெடுஞ்செழியன் இவ்வூரை வென்று தனதாக்கிக் கொண்டான். ‘விலங்கு’என்றால் வளைவு. சாலியூரில் கடல் வளைந்திருந்தது. காற்றால் செலுத்தப்படும் பெரும்பெரும் நாவாய்க் கப்பல்கள் இங்குப் பொன்னை இறக்கின. பொருள்களை ஏற்றின. அப்போதெல்லாம் முரசு முழங்கிற்று. நாவாயின் பாய்மரம் ‘இதை‘. இதில் நாட்டின் அடையாளக் கொடி கட்டப்பட்டிருந்தது. நாவாய் கடலலையில் ஆடியது. நாவாய் மலை போலவும், அதன் பாய்மரம் மலையில் மேயும் மழைமேகம் போலவும் தோன்றியது. இப்படிப் பல நாவாய்கள். இந்தத் துறைமுக நகரைச் சுற்றிலும் ஆழமான அகழிகள் இருந்தன. வானத்தைத் தொடுவது போன்ற பெருங்கடல். மேகங்கள் போல் நுரைதள்ளும் பேரலைகள். இந்த வளைந்த புணரிக் கடல்தான் உட்குழிவாக நிலப்பகுதியில் நுழைந்திருந்தது. (இந்தச் சாலியூர் இக்காலத்துத் தனுஷ்கோடியின் ஒரு பகுதியாய் இருந்து கடலால் கொள்ளப்பட்டது.) ‘புணரி’ என்று இங்குக் குறிப்பிடப்படுவது இராமேஸ்வரத்துக்கு மேற்கில் வடபால் தென்பால் கடல்நீர்கள் புணர்வதை உணர்த்துகிறது.
ஒருசார் விழவுநின்ற விய லாங்கண்\nமுழவுத் தோள் முரட் பொருநர்க்கு\nஉரு கெழு பெருஞ் சிறப்பின்\nஇரு பெயர்ப் பேரா யமொடு\nஇலங்கு மருப்பிற் களிறு கொடுத்தும்\nபொலந் தாமரைப் பூச் சூட்டியும்\nநலஞ் சான்ற கலஞ் சிதறும்\nபல் குட்டுவர் வெல் கோவே
சேரநாட்டின் பகுதியான குட்டநாட்டில் ஆங்காங்கே பல மன்னர்கள் ஆண்டு வந்தனர். இவர்களைக் ‘குட்டுவர்’ என்றனர். இப்படிப்பட்ட குட்டுவர் பலரை நெடுஞ்செழியன் வென்றான். ‘கிழார்’ எனப்படுவோர் நன்செய்நில உழவர். ‘தொழுவர்’ என்போர் நிலப் பணியாளர். தொழுவர் ஆற்று நீரை மேட்டு நிலங்களுக்கு ஏற்றத்தால் தெவ்வி இறைத்துப் பாய்ச்சினர். நீர் இறைக்கும்போது அவர்கள் பாடிய பாட்டிசை எங்கும் முழங்கியது. ‘ஆம்பி’ எனபது ஏற்றத்தில் நீரை மொண்டு ஊற்றும் சால். ‘தோடு’ என்பது ஆம்பியை ஏற்றத்தில் தொடுக்கும் பகுதி. அகன்ற ஆம்பியின் வாயில் நீரை மொள்ளும்போது ஆற்றிலிருந்த கயல் மீன்களும் மொண்டு ஊற்றப்படுவது உண்டு. அவ்வாறு மொண்டு ஊற்றப்பட்ட கயல்மீன்கள் வயலில் புரண்டன. கிழார் போர் அடிக்க எருதுகளைக் கயிறுகளைத் துவளவிட்டு மென்மையாகத் தொடுத்தனர். அந்த எருதுகளின் மணியோசை தெளிவாகவும் இனிமையாகவும் கேட்டது. இந்த ஓசையைக் கேட்டுப் பறவைகள் பறந்தோடின. பரதவர் மகளிர் கடற்கரை மணலில் முண்டக மரத்தடியில் குரவை ஆடிக் குரவை (குலவை) ஒலி எழுப்பினர். இது வயல்வெளிப் பகுதியில் நிகழ்ந்தது. மற்றொரு பக்கம் ஊர்ப்பகுதியில் விழாக் கொண்டாடும் மன்றங்களில் கலைஞர், உழவர், மறவர் ஆகியோருக்குக் கொடை வழங்கும் பாங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது. கொடையானது தங்கத் தாமரைப்பூ விருதாகவும் , விருதுக் கிண்ணங்களாகவும் இருந்தன.
கல் காயுங் கடுவேனி லொடு\nஇரு வானம் பெயலொ ளிப்பினும்\nவரும் வைகல் மீன் பிறழினும்\nவெள்ளமா றாது விளையுள் பெருக\nநெல்லி னோதை அரிநர் கம்பலை\nபுள்ளிமிழ்ந் தொலிக்கும் இசையே என்றும்\nசலம் புகன்று கறவுக் கலித்த\nபுலவு நீர் வியன் பெளவத்து\nநிலவுக் கானல் முழவுத் தாழைக்\nகுளிர்ப் பொதும்பர் நளித் தூவல்\nநிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை\nஇருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு\nஒலி யோவாக் கலி யாணர்\nமுது வெள்ளிலை மீக் கூறும்
மலையே காய்ந்து போகும்படி கடுமையான கோடை வந்தாலும், கரு மேகங்கள் மழை பொழியாவிட்டாலும், நாள்தோறும் காலையில் தோன்றும் கதிரவன் வடபாலோ தென்பாலோ பாகைஇடம் சாய்ந்து எழுந்தாலும், வைகை யாற்றில் வெள்ளம் வருவது மாறாததால் விளைச்சல் பெருகி நெல் அறுப்போர் பாடும் பாடலோசை, நீர்ப்பறவைகளின் பாடல் ஓசை. திமில்படகு வேட்டுவர் ஓசை. பெருங்கடலில் சுறா மிகுந்துள்ள இடங்களுக்கு விரும்பிச் சென்று கட்டு மரங்களில் மீனைப் பிடித்துக் கொண்டுவந்து நிலாமணல் கரையில் தாழை மரத்தடிக்கு எற்றும்போது முழவை முழக்கிக்கொண்டு பாடும் பாடல் ஓசை . உப்பு விற்போர் கூவும் ஓசை ஆகிய ஓசைகளோடு சேர்ந்து, முதுவெள்ளில் என்னும் பாண்டிய நாட்டுத் துறைமுகப் பகுதியில் அரசனை வாழ்த்தும் ஒலியும் கேட்டுக்கொண்டேயிருக்கும். முதுவெற்றிலை = தூத்துக்குடி.
வியன் மேவல் விழுச் செல்வத்து\nஇரு வகையான் இசை சான்ற\nசிறு குடிப் பெருந் தொழுவர்\nகுடி கெழீஇய நானிலவ ரொடு\nதொன்று மொழிந்து தொழில் கேட்பக்
சிறுகுடியில் வாழ்ந்த பெருந்தொழுவர் அறிவு வழங்குதல், ஆக்கம் பெற உதவுதல் என்னும் இருவேறு பாங்குகளால் புகழ் பெற்றிருந்தனர். பலரும் விரும்பிப் பேணும் பெருஞ்செல்வம் பெற்றவர்களாகவும் விளங்கினர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலங்களிலும் வாழ்ந்த இவர்கள் வழிவழியாகப் பாண்டியன் இட்ட பணியையும் நிறைவேற்றி வந்தனர்.
நட்டவர் குடி யுயர்க் குவை\nசெற்றவர் அரசு பெயர்க் குவை\nபேரு லகத்து மேஎந் தோன்றிச்\nசீரு டைய விழுச் சிறப்பின்\nவிளைந்து முதிர்ந்த விழு முத்தின்\nஇலங்கு வளை இருஞ் சேரிக்\nகட் கொண்டிக் குடிப் பாக்கத்து\nநற் கொற்கை யோர்நசைப் பொருந
வேந்தே! நீ உன்னோடு நட்பு கொண்ட அரசர்களின் குடியை உயர்வடையச் செய்வாய். உன்னோடு பகை கொண்ட அரசர்களைப் பெயர்த்தெரிவாய். கொற்கை பேருலகத்தில் பெயர்பெற்று மேலோங்கி நிற்கிறது. அதற்குக் காரணம் சீரும் சிறப்பும் மிக்க முத்து விளையும் சங்குகள் அங்கு விளைவதுதான். கொற்கைத் துறைமுகத்துச் சேரியில் வாழும் குடிமக்கள் செல்வ வளத்தில் கள்ளுண்டு களிப்பினும் உன்னை (நெடுஞ்செழியனை) அடையும் ஆசையோடு போராடுகின்றனர்.
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று\nஅஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பிற்\nகோழூ உன்குறைக் கொழு வல்சிப்\nபுலவு விற் பொலி கூவை\nஒன்று மொழி ஒலி யிருப்பில்\nதென் பரதவர் போ ரேறே
தென்பரதவர் போர்த்திறம் மிக்கவர். பகைவர் அஞ்சும்படி அவர் நாட்டுக்கே சென்று போரிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றவர். அவர்கள் பகைவரின் கொழுப்பைக் குத்திய அம்போடு கூடிய வில்லைத் தம் கூவைக் குடிசையில் சார்த்தியிருப்பர். ஊரில் ஒன்று கூடித் தம் பெருமையைப் பேசி ஒலித்துக் கொண்டிருப்பர். இப்படிப்பட்ட தென்பரதவரைப் போரிட்டு வென்றவனே!
அரிய வெல்லாம் எளிதினிற் கொண்டு\nஉரிய வெல்லாம் ஓம்பாது வீசி\nநனிபுகன் றுறைது மென்னா தேற்றெழுந்து\nபனிவார் சிமையக் கானம் போகி\nஅகநாடு புக்கவர் விருப்பம் வெளவி\nயாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து\nமேம்பட மரீஇய வெல்போர்க் குருசில்
நெடுஞ்செழியன் கிடைத்தற்கரிய பொருளையெல்லாம் எளிதாகப் பெற்றவன். அவற்றையும், தனக்கு உரியனவற்றையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு அள்ளிக் கொடுத்தவன் இந்த மகிழ்வோடு வாழலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்காமல் போருக்கு எழுந்தவன். பனிவார் சிமையம் என்பது இமயமலை. இமயமலைக் காட்டுக்குச் சென்று வழியில் இருந்த அகநாட்டு அரசர்களின் கோட்டைகளைக் கைப்பற்றியவன். அப்போது, அங்கெல்லாம் தான் விரும்பிய இடத்தில் தங்கியவன். இப்படிப் போரில் வென்ற அரசுச் செம்மலே!
உறு செறுநர் புலம் புக்கவர்\nகடி காவி னிலை தொலைச்சி\nஇழி பறியாப் பெருந்தண் பணை\nகுரூஉக் கொடிய எரி மேய\nநா டெனும் பேர் காடாக\nஆ சேந்த வழி மாசேப்ப\nஊரி ருந்த வழி பாழாக\nஇலங்கு வளை மட மங்கையர்\nதுணங்கை யஞ்சீர்த் தழூஉ மறப்ப\nஅவை யிருந்த பெரும் பொதியிற்\nகவை யடிக் கடு நோக்கத்துப்\nபேய் மகளிர் பெயர் பாட\nஅணங்கு வழங்கு மகலாங் கண்\nநிலத் தாற்றுங் குழூஉப் புதவின்\nஅரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவக்\nகொழும் பதிய குடி தேம்பச்\nசெழுங் கேளிர் நிழல் சேர\nநெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக்\nகுடுமிக் கூகை குராலொடு முரலக\nகழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக்\nகளிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர\nநல்லேர் நடந்த நசைசால் விளைவயல்\nபன்மயிர்ப் பிணவொடு கேழல் உகள\nவாழா மையின் வழிதவக் கெட்டுப்\nபாழா யினநின் பகைவர் தேஎம்
நெடுஞ்செழிய! உன் பகைவர் நாடு பாழாயிற்று. (எப்படியெல்லாம் பாழாயிற்று என்று இங்குக் கூறப்படுகிறது.) செழியன் வலிமை மிக்க பகைவர் நாட்டுக்குள் புகுந்தான். அவர்களது காவற் காடுகளையும், வயல்களையும் எரித்தான். அதனால் அவர்களின் நாட்டுக்கு ‘நாடு’ என்னும் பேர் இல்லாமல் போய்க் ‘காடு’ என்னும் பெயர் வழங்கலாயிற்று. கறவைப் பசுக்கள் மேய்ந்த வெளிகளில் காட்டு விலங்குகள் திரிந்தன. ஊர் இருந்த இடம் பாழ் நிலமாக மாறியது. அந்த ஊர்களில் வாழும் ஒரு சிலரும் விழாக் கொண்டாடித் துணங்கை ஆடுவதையே மறந்து விட்டனர். மக்கள் கூடி மகிழ்ந்த பொதுமன்றங்களில் பேய்கள் கூத்தாடின. ‘அணங்கு’ என்னும் அழகியர் உலாவிய தெருக்களில் கணவனை இழந்த ‘அரந்தைப் பெண்டிர்’ அழுது கொண்டிருந்தனர். கொழுங்குடி மக்கள் அவர்களின் மூதாதையர் நிழலைச் சென்றடைந்தனர். (மாண்டனர்) கரிக்குதிர்ப்பள்ளி (ஒப்பு நோக்குக ‘குராப்பள்ளி’) ஓங்கி உயர்ந்த மாளிகைகளைக் கொண்ட நகரங்கள் செழியனின் அடிக்கீழ் வீழ்ந்தன. மாடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லை. மாறாக கூகைகளும் கோட்டான்களும் இருந்து கூவிக்கொண்டிருந்தன. கழுநீர்ப் பூக்கள் பூத்திருந்த பொய்கை காட்டு யானைகள் மேயும் செருந்திப் பூவும், கண்புப் பூவும் பூத்து வறண்டு போயிற்று. நல்லேர் பூட்டி உழுத வயல்களைக் காட்டுப் பன்றிகள் உழுது கொண்டிருந்தன. பகைவர் நாடு இப்படிப் பாழாகி மக்கள் வாழாததால் அந்த இடங்களுக்குச் செல்லும் வழித்தடங்களும் கெட்டுப் போயின.
எழாஅத் தோள் இமிழ்மு ழக்கின்\nமாஅத் தாள் உயர் மருப்பிற்\nகடுஞ் சினத்த களிறு பரப்பி\nவிரி கடல் வியன் றானையொட\nமுரு குறழப் பகைத்தலைச் சென்று\nஅகல் விசும்பின் ஆர்ப் பிமிழப்\nபெய லுறழக் கணை சிதறிப்\nபல புரவி நீ றுகைப்ப\nவளை நரல வயி ரார்ப்பப்\nபீ டழியக் கடந் தட்டவர்\nநா டழியக் எயில் வெளவிச்\nசுற்ற மொடு தூ வறுத்தலிற்\nசெற்ற தெவ்வர் நின்வழி நடப்ப\nவியன்கண் முதுபொழில் மண்டில முற்றி
செழியன் முதுபொழிலை முற்றுகையிட்டான். (அம் முற்றுகையின் போது எப்படித் தாக்கினான் என்பது இங்குக் கூறப்படுகிறது) முரசை முழக்கினான். யானைப்படையைப் பரவலாக நிறுத்தினான். கடல் போன்ற காலாள் படையுடன் சென்று தாக்கினான். முருகனைப் போல் மோதினான். போர் முழக்கம் வானில் எதிரொலித்தது. வெயிலின் கதிர்கள் போல் அம்புகள் பாய்ந்தன. போர்க்குதிரைகள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு பாய்ந்தன. சங்கு ஊதினர். கொம்பு ஊதினர். பகையரசரின் பெருமை அழிந்தது. நாடு அழிந்து போனதால் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். பகை நாட்டு மக்களின் சுற்றத்தார்கூட அழிந்து போயினர். எதிர்த்துப் போரிட்ட பகைவர் செழியனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டனர். இவ்வாறு முதுபொழில் முற்றுகை நடந்து முடிந்தது.
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்\nபொய்சேண் நீங்கிய வாய்நட் பினையே\nமுழங்குகட லேணி மலர்தலை யுலகமொடு\nஉயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்\nபகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே\nதென்புல மருங்கின் விண்டு நிறைய\nவாணன் வைத்த விழுநிதி பெறினும்\nபழிநமக் கெழுக என்னாய் விழுநிதி\nஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே
வானுலகத்தை அமிழ்தத்தோடு சேர்த்துக் கொடுத்தாலும் தான் கொடுத்த வாக்கிலிருந்து தவற மாட்டான். பகைவர்க்கு அஞ்சிப் பணியாதவன் முழங்கும் கடல் ஏணிக்கு மேல் உலகம் மலர்ந்து பூத்திருக்கிறது.உயர்ந்த மேல் உலகத்தின் வானோர் மண்ணுலகத்தையே படையாகத் திரட்டிக்கொண்டு எதிர்த்து வந்தாலும் செழியன் பணியமாட்டான். பழிக்கு அஞ்சுபவன் - பாண்டிய நாட்டின் தென்பகுதியில் வாணன் என்பவன் விழுமிய நிதிக்குவியலை மூங்கில் குழாய்களில் சேமித்து வைத்திருந்தான். அதனை முழுமையாகப் பெறுவதாயினும் ‘ஏற்றல்’ பழி வரும் என்று எண்ணி வாங்கமாட்டான். புகழ்வேள்வி செய்பவன் - தன்னிடம் உள்ள விழுமிய செல்வத்தை யெல்லாம் ‘ஈய வேண்டும்’ என்னும் எண்ணத்தோடு வாரி வழங்கும் இசை வேள்வியைச் செய்வான்.
தவாப் பெருக்கத் தறா யாணர\nஅழித் தானாக் கொழுந் திற்றி\nஇழித் தானாப் பல சொன்றி\nஉண் டானாக் கூர் நறவில்\nதின் றானா இன வைக\nனிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப்\nபயனற வறியா வளங்கெழு திருநகர்\nநரம்பின் முரலு நயம்வரு முரற்சி\nவிறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்\nபாணர் உவப்ப களிறுபல தரீஇக்\nகலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ\nமறங் கலங்கத் தலைச் சென்று\nவாளுழந் ததன் தாள் வாழ்த்தி\nநா ளீண்டிய நல் லகவர்க்குத்\nதே ரோடு மா சிதறிச்
வெறுக்கை என்பது ‘போதும் போதும்’ என்று வெறுக்கத் தக்க அளவில் பெருகியுள்ள செல்வம். ஆனா = அமையாத. யாணர் =புதுப்புது வருவாய். குறையவே குறையாத செல்வம். புதுப்புது வருவாய். தின்றழிக்க முடியாத புலால் உணவு. அள்ள அள்ளக் குறையாத பெருஞ்சோறு. உண்டு மாளாத கள். இவற்றைத் தின்று மாளாத காலைப்பொழுது. பயன்படுத்த முடியாமல் நிலத்திலேயே கொட்டிக் கிடக்கும் வெறுக்கத் தக்க செல்வம். எதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் செல்வ வளம் செழித்துக் கிடக்கும் அரண்மனை. யாழ் மீட்டும் விறலியர் கைகளுக்கு வளையல். பாணர்களுக்கு யானைகள். அதிகாலையில் அவைக்கு வந்து அரசனை வாழ்த்தும் அகவர்களுக்கு குதிரை பூட்டிய தேர். அகவர் = ’ஜே’ போடுவோர் என்றெல்லாம் பரிசுகளை நெடுஞ்செழியன் வழங்கினான். நண்பர்கள் மகிழும்படி வென்று கொண்டுவந்தனவற்றை வழங்கினான்.
அதனால் குணகடல் கொண்டு குடகடல்முற்றி\nஇரவு மெல்லையும் விளிவிட னறியாது\nஅவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக்\nகவலையங் குழும்பின் அருவி ஒலிப்பக்\nகழைவளர் சாரற் களிற்றின நடுங்க\nவரைமுத லிரங்கும் ஏறொடு வான்ஞெமிர்ந்து\nசிதரற் பெரும்பெயல் சிறத்தலிற் றாங்காது
புகழோடு பெருவாழ்வு வாழ்ந்த அரசர்கள் பலர் மாண்டொழிந்தனர். அதனால் நீ உன்னை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். மேகங்கள் கிழக்கிலுள்ள கடலில் நீரை முகந்துகொண்டு சென்று மேற்கிலுள்ள கடலை முற்றுகையிட்டன. அதனால் குளிர்ந்து கொட்டும் இடம் தெரியாததால் தாழ்ந்த நிலப் பரப்பிலும், உயர்ந்த மலைப் பரப்பிலும் மழையைக் கொட்டின. அதனால் கவலை என்னும் மலைப்பிளவுப் பகுதிகளில் அருவி ஓடி ஒலித்தது. மழை மிகுதியால் மூங்கில் காடுகளில் மேய்ந்த யானைக்கூட்டம் நடுங்கிற்று. வானத்தில் முழங்கும் இடி மலைமுகடுகளில் மோதி எதிரொலித்தது.
அள்ளற் றங்கிய பகடுறு விழுமங்\nகள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்ப\nஒலிந்த பகன்றை விளைந்த கழனி\nவன்கை வினைஞர் அரிபறை யின்குரல்\nதளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற்\nகவிகொள் சும்மை யொலிகொ ளாயந்\nததைந்த கோதை தாரொடு பொலியப்\nபுணர்ந்துட னாடும் இசையே யனைத்தும்\nஅகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக்\nகுருகு நரல மனை மரத்தான்\nமீன் சீவும் பாண் சேரியொடு\nமருதஞ் சான்ற தண்பணை சுற்றிஒருசார்ச
தாமரைப் பூக்களில் காடைக்குருவி தன் சேவலோடு உறங்கியது. அங்குப் படர்ந்திருந்த வள்ளைக் கொடிகளை ஒதுக்கிவிட்டு வலை போட்டதில் கிட்டிய பெரிய பெரிய மீன்களை வலைமீனவர் விலை சொல்லிக் கூவினர். நூழில் என்பது கரும்பாலை. வயலில் விளைந்த கரும்பை நூழில் எந்திரம் நெரிக்கும் ஓசை முழக்கம் கேட்டது. கரும்பின் வெல்லக் கட்டியை ஏற்றிச் செல்லும்போது சேற்றில் மாட்டிக் கொண்ட வண்டிச் சக்கரத்தைத் தூக்கி விட்டுக் கொண்டு உழவர் காளைகளை அதட்டி ஓட்டும் ஓசை கேட்டது. மாலைக்குப் பயன்படும் பகன்றை வயல்வெளியில் தழைத்திருந்தது. தொழிலாளர் அதனை அரிக்கும்போது முழக்கும் பறையின் ஒலி கேட்டது. திருப்பரங்குன்றத்தில் மழை பொழியும் ஓசை கேட்டது. மழை பொழியும் மகிழ்ச்சியால் மக்கள் செய்த ஆரவார ஒலி கேட்டது. பகன்றை மாலை சூடிக்கொண்டு மக்கள் கை கோத்து ஆடும் குரவை, தோள் தழுவி ஆடும் துணங்கை ஆகியவற்றின் பாட்டோசை கேட்டது. இந்த ஓசைகள் வானளாவ முழங்கியதால் எங்கும் இனிய ஓசையே எதிரொலித்தது. மீன் தேடும் குருகுகள் நீர்ப் பரப்புகளுக்குச் செல்லாமல் மீன் சீவும் வீட்டு முற்றத்திலிருந்த மரத்தில் அமர்ந்து இரை தேடலாயின.
சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்\nகருங்கால் வரகின் இருங்குரல் புலர\nஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர\nஎழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப்\nபெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி\nமடக்கட் பிணையொடு மறுகுவன உகளச்\nசுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழற்\nபாஅ யன்ன பாறை யணிந்து\nநீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும்\nவெள்ளி யன்ன வொள்வி யுதிர்ந்து\nசுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்\nமணிமரு ணெய்தல் உறழக் காமர்\nதுணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர\nவல்லொன் தைஇய வெறிக்களங் கடுப்ப\nமுல்லை சான்ற புறவணிந் தொருசார்
தினைக்கதிர்கள் கொய்யும் நிலையைப் பெற்றிருந்தன. ‘கௌவை’ என்னும் கேழ்வரகு அறுவடை நிலையில் கருத்திருந்தது. வரகு அறுவடை நிலையில் விளைந்து காய்ந்திருந்தது. தோண்டிய குழிகளில் மணிகள் ஒளி கிளர்ந்தன. காட்டு வழியெல்லாம் பொன் கொழித்தது. சிறிய தலையுடன் பேரழகு கொண்டிருக்கும் ‘நௌவி’ மான்கள் தம் பெண்மான்களுடன் சுழன்று விளையாடின. பாறையின் நிழல் பகுதியில் கொன்றைப் பூக்கள் கொட்டிப் பாய் விரித்திருந்தது. நீலவானம் போல் காட்சிதரும் பயிர்வெளியில் பயிரில் பூக்கும் ‘ஒள்வீ’ வெள்ளி விரித்தது போல் காணப்பட்டது. கருமை நிற முசுண்டைப் பூக்களும், வெண்மை நிற முல்லைப் பூக்களும், நீல நிற நெய்தல் பூக்களும், மேட்டு நிலங்களில் பூக்கும் தொய்யில் பூக்களும் ஆங்காங்கே மலர்ந்திருந்தன. இப்படி முல்லைநிலம் கெட்டிக்காரன் வரைந்த ஓவியம் போலக் காட்சியளித்தது. இந்த முல்லை நிலப் பகுதி ஒருபக்கம்.
நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய\nகுறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி\nஐவன வெண்ணெலொ டரில்கொள்பு நீடி\nஇஞ்சி மஞ்சட் பைங்கறி பிறவும்\nபல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டித்\nதினைவிளை சாரற் கிளிகடி பூசல்\nமணிப்பூ அவரைக் குரூஉத்தளிர் மேயும்\nஆமா கடியுங் கானவர் பூசல்\nசேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்\nவீழ்முகக் கேழல் அட்ட பூசல்\nகருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர்\nநறும்பூக் கொய்யும் பூசல் இருங்கேழ்\nஏறடு வயப்புலிப் பூசலொ டனைத்தும்\nஇலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்டக்\nகருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து\nஅருங்கடி மாமலை தழீஇ ஒருசார்
குறிஞ்சி நிலத்துப் பயிர் - நல்ல வயிரம் பாய்ந்த மரங்களை வெட்டி வீழ்த்தி அவற்றைச் சுட்டெரித்த நிலத்தில் பயிர் செய்தனர். குச்சியால் குழி போட்டு அதில் ஊன்றிய தோரையின் (துவரை) குறுங்கதிர் விளைந்திருந்தது. ஐயவி என்னும் வெண்சிறுகடுகுப் பயிர் நீண்டு விளைந்திருந்தது. ஐவன வெண்ணெல் முற்றி விளைந்திருந்தது. இஞ்சி, மஞ்சள், கீரைவகைகள் முதலான பிறவும் பயன்படு தாரமாக (விளைச்சல் வருவாயாக) விளைந்த தானியங்கள் மலைப்பாறையில் கொட்டிக் காயவைக்கப்பட்டிருந்தன. தினை விளைந்திருக்கும் மலைச்சாரலில் கிளிகளை ஓட்டும் மகளிர் பூசல் அவரையை மேயும் ஆமாக்களை ஓட்டும் கானவர் பூசல், பருகும் நீருக்காக பரண்மீதேறிக் காவல் புரிவோர் பூசல், தோண்டி வைத்த குழியில் காட்டுப் பன்றிகள் இறங்கி அட்டகாசம் செய்வதை ஓட்டும்பூசல், மகளிர் வேங்கைப்பூ பறிக்கும்போது பாடும் பூசல், காட்டெருமைகளைப் புலி தாக்கும்பூசல், போன்றவை அனைத்தும் அருவி ஒலியோடு மலையில் மோதி எதிரொலித்தன. இவை, செழியன் தேயத்தின் ஒருசார் பகுதியாக விளங்கின. இந்தக் குறிஞ்சி நிலப்பகுதி ஒருபக்கம்.
இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப\nநிழத்த யானை மேய்புலம் படரக்\nகலித்த இயவர் இயந்தொட் டன்ன\nகண்விடு புடையூஉத் தட்டை கவினழிந்து\nஅருவி யான்ற அணியில் மாமலை\nவைகண் டன்ன புன்முளி யங்காட்டுக்\nகமழ்சூழ் கோடை விடரக முகந்து\nகாலுறு கடலின் ஒலிக்குஞ் சும்மை\nஇலைவேய் குரம்பை உழையதட் பள்ள\nஉவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்\nசிலையுடைக் கையர் கவலை காப்ப\nநிழலுரு விழந்த வேனிற்குன் றத்துப்\nபாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்
யானை பச்சை மூங்கிலை உண்டு வாழ்ந்துவந்தது. அந்தப் பெரிய பச்சை மூங்கில் தூறு தீப்பற்றி எரிந்துவிட்டது. அதனால் யானை மேய்ச்சலுக்காக வேறு நிலத்தைத் தேடிச் சென்று விட்டது. இசைவாணர்கள் இசைக்கருவிகளை முழக்குவது போல கானவர் மூங்கிலைப் பிளந்து செய்த தம் தட்டை என்னும் கருவியை தழைத்திருக்கும் தம் பயிரை மேய வரும் யானைகளை விரட்ட முழக்குவர். யானைக்கூட்டம் வேற்றுப் புலம் சென்றுவிட்டதால் தட்டை முழக்கப்படாமல் தன் அழகமைதி அழிந்து வெறுமனே கிடந்தது. அருவி ஒழுகும் அழகிய பெரிய மலை. அதன் சாரலில் வைக்கோலைப் போலப் புல் உலர்ந்து கிடக்கும் அழகிய காடு. அதில் கோடை மேகம் இடி இடித்து உண்டாக்கிய வெடிப்பு. அந்த நிலவெடிப்பில் காற்று நுழையும்போது, காற்று மோதி கடலலை ஒலிப்பது போல ஓசை. இந்த ஓசை கேட்கும் இடத்தில் இலைகளால் வேயப்பட்ட குடிசை. அதன் பக்கத்தில் (பொடி சுடாமல் இருக்கத்) தோலை விரித்து அதன்மேல் நின்றுகொண்டு இளைஞர் வில்லேந்திய கையராய்க் குடிசையைக் காத்துக்கொண்டு நின்றனர். மரங்களில் இலை இல்லை. எனவே நிழல்கூடத் தன் உருவத்தை இழந்து காணப்பட்ட பாலைநிலம் அது. (ஒப்பு நோக்குக - ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை எனபதோர் படிமம் கொள்ளும் காலை’ - சிலப்பதிகாரம்) இந்தப் பாலை நிலப் பகுதி ஒருபக்கம்.
முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம்\nஅரம்போழ்ந் தறுத்த கண்ணேர் இலங்குவளை\nபரதர் தந்த பல்வேறு கூலம்\nஇருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்\nபரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்\nகொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல\nவிழுமிய நாவாய் பெருநீ ரோச்சுநர்\nநனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார்\nபுணர்ந்துடன் கொணர்ந்த புரவியொ டனைத்தும்\nவைகல் தோறும் வழிவழிச் சிறப்ப\nநெய்தல் சான்ற வளம்பல பயின்றாங்கு\nஐம்பால் திணையுங் கவினி யமைவர
முழங்கும் கடலலை தரைக்குக் கொண்டுவந்து சேர்த்ததால் ஒளிரும் முத்துக்கள், சங்குகளை அரத்தால் அறுத்துச் செய்த வளையல்கள், பரதர் மக்கள் கடலில் குளித்துக் கொண்டுவந்த முத்து, பவளம் போன்ற பல்வேறு பொருள்கள், உப்பங்கழி வயலில் விளைந்த வெள்ளுப்பு. பரந்து விரிந்த கடலில் திமிலில் சென்று கொண்டுவந்த பெரிய மீன்கள், அவை அடிக்கும் துடிப்பறையின் கண்முகம் போல நறுக்கி வைத்திருக்கும் மீன் துண்டுகள். நாவாய்க் கப்பலை ஓட்டிச் சென்ற வணிகர் கொண்டுவந்த குதிரைகள், (இந்தக் குதிரைகள் பண்டங்களை ஏற்றிச் செல்ல நில வணிகரால் பயன்படுத்தப்பட்டன) இவை போன்ற அனைத்தும் நாள்தோறும் வழிவழியாகச் சிறப்படைந்து கொண்டிருந்த நெய்தல் நிலப் பெருவெளியின் சான்ற வளம். இந்த நெய்தல் நிலப் பகுதி ஒருபக்கம்.
முழ வீமிழும் அக லாங்கண்\nவிழவு நின்ற வியன் மறுகில்\nதுணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி\nஇன்கலி யாணர்க் குழூஉப்பல பயின்றாங்குப\nபாடல் சான்ற நன்னாட்டு நடுவண்
பாண்டிய நாடு இவ்வாறு ஐந்து நிலப் பகுதிகளின் அமைதியும் ஒருங்கிணைந்த நாடாக அழகுடன் விளங்கியது. பெருந்தெருக்களில் முழவின் ஓசை. குறுந்தெருக்களில் விழாக்கோலம் ஆங்காங்கே பலப்பல குழூஉக்கள் குரவையும் துணங்கையும் என்று தழூஉப் பிணைந்து விளையாடித் திளைக்கும் காட்சி. அந்த ஆட்டங்களில் நாட்டைப் புகழ்ந்து பாடும் நல்லிசை. இப்படிப்பட்ட நாட்டுக்கு நடுவில்.......
கலை தாய உயர் சிமையத்து\nமயி லகவு மலி பொங்கர்\nமந்தி யாட மாவிசும் புகந்து\nமுழங்குகால் பொருத மரம்பயில் காவின்\nஇயங்குபுனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற்\nகான்பொழில் தழீஇய அடைகரை தோறுந்\nதாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்\nகோதையி னொழுகும் விரிநீர் நல்வரல்\nஅவிரறல் வையைத் துறைதுறை தோறும\nபல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி\nஅழுந்துபட் டிருந்த பெரும்பாண் இருக்கையும்
உயர்ந்த மலையுச்சிகளிலும் மரவுச்சிகளிலும் கலை என்னும் ஆண்குரங்கு தாவும். அதனால் பூக்கள் உதிரும். அதைப் பார்த்து அங்கே இருக்கும் மயில் அகவும். மயிலோசையின் தாளத்திற்கேற்ப மந்தி என்னும் பெண்குரங்கு ஆடும். இந்த நிகழ்வுகளை அங்கிருக்கும் மற்ற விலங்கினம் விரும்பும். மரக்காடுகளில் காற்று மோதி ஆட்டத்துக்கு ஒத்திசை கூட்டித் தரும். வையை ஆற்று வெள்ளம் மணலைக் கொழிக்கும். அங்கே கோங்க மரம் பூத்துக் குலுங்கும். ஆங்காங்கே வையையாற்றுத் துறைகளில் பல்வேறு வகையான பூக்கள் பூத்திருக்கும். அவை தண்டலை என்னும் சோலைகள். அந்தச் சோலைகளில் குடிபெயரும் விருப்பமே இல்லாமல் பெரும்பாணர் வாழும் ஊர்கள். வெண்டலை என்பது ஆற்றிலிருக்கும் வெண்மணல் வெளி. தண்டலை என்பது குளிர்ந்த மலர்ச்சோலை.
நிலனும் வளனுங் கண்டமை கல்லா\nவிளங்குபெருந் திருவின் மான விறல்வேள்\nஅழும்பில் அன்ன நாடிழந் தனருங்\nகொழும்பல் புதிய குடியிழந் தனரும்\nதொன்றுகறுத் துறையுந் துப்புத்தர வந்த\nஅண்ணல் யானை அடுபோர் வேந்தர்\nஇன்னிசை முரச மிடைப்புலத் தொழியப்\nபன்மா றோட்டிப் பெயர்புறம் பெற்று\nமண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்\nவிண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்\nதொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை\nநெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்\nமழையாடு மலையி னிவந்த மாடமொடு\nவையை யன்ன வழக்குடை வாயில்\nவகைபெற எழுந்து வான மூழ்கி\nசில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில்\nயாறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்
அழும்பில் வேள் - அழும்பில் (வேள்) என்பவனுக்குப் பாண்டிய நாட்டின் வளத்தைக் கண்டு சும்மா இருக்க முடியவில்லை. அவன் முன்பே பெருஞ்செல்வம் படைத்தவன். என்றாலும் பாண்டிய நாட்டை அடையப் பாண்டியனைத் தாக்கினான். போரில் அழும்பில் (வேள்) தன் நாட்டை இழந்தான். பாண்டியன் அழும்பில் வேளின் மான உணர்வை மதித்துத் தன் மதுரையில் தங்க இனம் தந்தான். அவனும் மதுரையில் வாழ்ந்துவந்தான். தன் குடும்பத்தை இழந்த பற்பல ஊரைச் சேர்ந்தவர்களும் மதுரையில் வாழ்ந்தனர். பண்டைக் காலம் தொட்டுப் பாண்டியனோடு பகைமைச் சினம் கொண்டு வாழ்ந்தவரும் தலைமையான யானைப்படை கொண்டவரும் ஆகிய வேந்தர் தம் முரசைப் போர்க்களத்தில் போட்டுவிட்டுப் பெயர்ந்தோடும்படி பாண்டியன் போரிட்டான். அவர்களின் முரசைக் கொண்டுவந்து பாண்டியன் தன் அகழி நீரில் குளிப்பாட்டித் தனதாக்கிக் கொண்டான். ஆழத்தால் நீல நிறம் தோன்றும் அகழியும், வானளாவ ஓங்கியதும், பல படைக்கருவிகளைத் தன்னகத்தே கொண்டதுமான மதிலும், வலிமைத் திறம் காட்டும் அணங்கு உருவம் பொறிக்கப்பட்ட நிலைகளும், எண்ணெய் பூசப்பட்டுப் பளபளக்கும் கதவுகளும் கொண்டு மலைபோல் ஓங்கி மழைமேகங்கள் ஆடும் மாட மாளிகைகளில் அவர்கள் வாழ்ந்துவந்தனர். மாடங்களுக்கு வையை ஆறு போல் முற்றம். வானத்தில் மூழ்கிக் கிடந்த அந்த மாடிகளில் புழை என்னும் சன்னல். அதில் சில்லென்று காற்று நுழையும்போது புல்லாங்குழல் போன்ற இசை. ஆறு போல் அகன்ற தெருக்களில் அந்த மாளிகைகள்.
பல்வேறு குழாஅத் திசையெழுந் தொலிப்ப\nமாகா லெடுத்த முந்நீர் போல\nமுழங்கிசை நன்பணை அறைவனர் நுவலக்\nகயங்குடைந் தன்ன இயந்தொட் டிமிழிசை\nமகிழ்ந்தோ ராடுங் கலிகொள் சும்மை
மதுரைத் தெருக்களில் மகிழ்ச்சியுடன் பாடி ஆடினர். அவர்களின் களிப்பு ஆரவாரம் கடலில் காற்றுஅடிக்கும்போது அலை எழுப்பும் ஆரவாரம் போல் இருந்தது. முரசு முழக்கும் ஓசை, குளம் வெட்டியது போல் வாயகன்ற இசைக்கருவிகளைத் தட்டுவதால் ஒலிக்கும் இசை, இவற்றைக் கேட்டு மகிழ்ந்து ஆடிப்பாடும் ஆரவாரம், ஆகியவை தெருக்களில் கேட்டுக்கொண்டேயிருந்தன.
பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின்\nவீங்குபிணி நோன்கயி றரீஇ யிதைபுடையூக்\nகூம்புமுதல் முருங்க எற்றிக் காய்ந்துடன்\nகடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ\nநெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல\nஇருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து\nகோலோர்க் கொன்று மேலோர் வீசி\nமென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக்\nகந்துநீத் துழிதருங் கடாஅ யானையும்
கடலில் ஆடும் நாவாய் போலக் கட்டுத் தறியில் ஆடும் களிறுகள். பருத்த மீன்கள் வந்துபோகும் கடல். சங்குகள் மேயும் கடல். கப்பலில் பாய்மரம் கட்டிய கயிறு அறுந்து ‘இதை’ என்னும் பாய் காற்றில் பறக்கும் போது ,நாவாய் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுக் கடலிலுள்ள கல்லில் மோதிச் சூறாவளிச் சுழலில் அகப்பட்டுச் சுழலும் நாவாய் போல, இருபுறமும் மணி ஆடி அடித்துக்கொண்டு செல்லும்போது கையில் அங்குசக் கோலைக் கொண்டிருக்கும் தன் பாகனைக் கொன்றுவிட்டு தன்மேல் அமர்ந்திருப்போரை வீசி எறிந்துவிட்டு, தன்னைப் பிணித்துள்ள சங்கிலித் தொடரைச் சற்றும் பேணாமல், கட்டியிருக்கும் தூணைச் சாய்த்துவிட்டு வெளியேறும் களிறு தெருவில் செல்லும். (போருக்கு இட்டுச் செல்லாமல் கட்டப்பட்டிருந்ததால் யானை இப்படிக் கட்டுக்காவல் மீறி வெளிப்பட்டுத் திரிந்தது.)
பூந்தலை முழவின் நோன்றலை கடுப்பப்\nபிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர்\nபலவகை விரித்த வெதிர்பூங் கோதையர்\nபலர்தொகுபு இடித்த தாதுகு சுண்ணத்தர்\nதகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய்\nநீடுகொடி யிலையினர் கோடுசுடு நூற்றினர்\nஇருதலை வந்த பகைமுனை கடுப்ப\nஇன்னுயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து\nஏங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றைப்\nபல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர்\nமலைபுரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர
பிடகை என்பது பூக்கூடை. முழவின் வாய்போல் அகன்ற வாயையுடைய பிடகையில் பூ வைத்துக் கொண்டு மகளிர் பூ விற்றனர். சிலர் மணக்கும் பூ மாலை விற்றனர் சிலர் சுண்ணம் விற்றனர். சுண்ணம் என்பது talc poweder, பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு ஆகியனவும் விற்கப்பட்டன. போர்முனை போல் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை நடைபெற்றது. இந்தக் கடைகள் போனபின் பண்ணியக் கடைகள் மாடிவீடுகளின் நிழலில் வைக்கப்பட்டன. பண்ணியம் என்பது இட்டிலி, அப்பம், வடை முதலான பலகார வகைகள்.
இருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்\nபெரும்பின் னிட்ட வானரைக் கூந்தலர்\nநன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர்\nசெந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை\nசெல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்ன\nசெய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்கண்\nஐஇய கலுழு மாமையர் வையெயிற்று\nவார்ந்த வாயர் வணங்கிறைப் பணைத்தோட்\nசோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகைத்\nதொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை\nமையுக் கன்ன மொய்யிருங் கூந்தல்\nமயிலிய லோரும் மடமொழி யோரும்\nகைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கையெறிந்து\nகல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப்
தொன்முது பெண்டிர், மயிலியலோர், மடமொழியோர் என்னும் பல்திற மகளிர் கல்லா மாந்தரொடு உறவாடும்போது கையால் தட்டிக்கொடுக்கும் வகையில் தாக்கி உறவாடி மகிழ்ந்தனர். தொன்முது பெண்டிர் தன் நரைமுடியில் கடலில் நுரையலையில் மிதந்துவரும் சங்கு போல் கொண்டை போட்டிருந்தனர். மயிலியலோர் எப்படியிருந்தனர்? கருமேகம் கொட்டி வழிவது போல் கூந்தல். பசும்பொன்னைச் செந்தீயில் போட்டுச் செய்த பாவை இளவெயிலில் மிளிர்வது போன்ற செய்ய மேனி. அதில் ‘ஐ’ என்று வியக்கும்படி ஒழுகும் மாமை நிறம். (‘ஐ வியப்பு ஆகும்’ - தொல்காப்பியம்) கூர்மையான பற்கள் பகட்டிக் காட்டும் வாய். ‘கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமல்‘ அவ்வாய் பேசும் மடமொழி. வளைந்த மூங்கில் போன்ற தோள். அந்தத் தோளில் கிடந்து கிடந்து சோர்ந்து போய்க் கழன்று விழுவது போன்ற வந்திகை என்னும் தோளணி. கொளுத்தக் கொண்டு கொண்டது விடாத மடக் கண்ணில் ஊடும் சினம் கொண்ட பார்வை. இப்படிப்பட்ட மகளிர் இந்த மெய்ப்பாடுகளைக் கல்லாத காளையரைத் தட்டிக்கொடுத்து அவர்களோடு பேசித் திளைத்தனர்.
புடையமை பொலிந்த வகையமை செப்பிற்\nகாம ருருவிற் றாம்வேண்டு பண்ணியம்\nகமழ்நறும் பூவொடு மனைமனை மறுக\nமழைகொளக் குறையாது புனல்புக மிகாது\nகரைபொரு திரங்கு முந்நீர் போலக்\nகொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது\nகழுநீர் கொண்ட எழுநாள் அந்தி\nஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே\nமாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்\nநாளங் காடி நனந்தலைக் கம்பல
பூ விற்போரும், பண்ணியம் விற்போரும் வீடு வீடாகச் சென்று விற்பதும் உண்டு. மழைமேகங்கள் மொண்டு செல்வதால் கடல் குறைவது இல்லை. ஆற்று வெள்ளம் வந்து சேர்வதால் அளவு கூடுவதும் இல்லை. அதுபோலக் கூடல் நகரத்துச் செல்வம் பிறர் கொண்டுசெல்வதால் குறைவதும் இல்லை. பிறர் கொண்டுவந்து தருவதால் மிகுவதும் இல்லை. அரசனின் ஒவ்வொரு வெற்றியின்போதும் வெற்றிவிழா ஏழு நாள் கொண்டாடப்படும். அதற்கு ‘ஆடு துவன்று விழா’ என்று பெயர். செங்கழுநீர் பூத்த குளத்தில் வெற்றி தந்த வேல், வாள் முதலானவற்றைக் கழுவி அக்குளக்கரையில் அந்த ‘ஆடு துவன்று விழா’ கொண்டாடப்படும். அந்த விழா நாடு முழுவதும் ஆங்காங்கே கொண்டாடப்படும். அந்த விழாவின்போது எழும் ஆரவாரம் போல மதுரை நகரத்துக் கடைத்தெருவில் பகல் பொழுதில் ஆரவாரம் எழுந்துகொண்டேயிருக்கும்.
வெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்\nசெக்கர் அன்ன சிவந்துணங் குருவிற்\nகண்பொரு புகூஉம் ஒண்பூங் கலிங்கம்\nபொன்புனை வாளொடு பொலியக் கட்டித்\nதிண்டேர்ப் பிரம்பிற் புரளுந் தானைக்\nகச்சந் தின்ற கழறயங்கு திருந்தடி\nமொய்ம்பிறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல்\nமணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை\nஅணிகிளர் மார்பி னாரமொ டளைஇக்\nகாலியக் கன்ன கதழ்பரி கடைஇக\nகாலோர் காப்பக் காலெனக் கழியும்
குதிரையில் திரியும் காவலரும், கால்நடையில் திரியும் காவலரும் கடைத்தெரு முழுவதும் காவல் புரிவர். அவர்கள் செக்கர் வானம் போல் சிவந்த உடை அணிந்திருப்பர். அந்தச் செந்நிறத்தில் பட்டுக் கதிரவன் ஒளியே மங்கிப் போகும். அந்த ஆடையுடன் சேர்த்து வாளும் கட்டியிருப்பர். வாளின் கைப்பிடி பொன்னால் ஆனது. ‘திண்தேர்ப் பிரம்பு’ என்பது பிரம்பாலான வில்லுவண்டி. (இருக்கை, சக்கரம் போன்ற இன்றியமையா உறுப்புக்களைக் கொண்ட சிறிய வண்டி) இந்தத் தேரில் ஏறித் திரியும் தானைக்காவலர்களும் (படைக்காவலர்களும்) உண்டு. அவர்களின் கால்களில் கழல் இருக்கும். அது கச்சம் போல் இறுகலாக மாட்டப்பட்டிருப்பதால் அவர்களின் காலைத் தின்று அவ்விடத்தில் காப்புக் காய்த்திருக்கும். அவர்கள் மார்புக்குக் கீழே தெரியல் என்னும் அடையாள மாலை, மணி கோத்தது போன்ற பூமாலை ஆகியவற்றைச் சந்தனம் பூசிய மார்பில் அணிந்திருப்பர். இவர்கள் காற்றைப்போல் பறக்கும் குதிரை மேலும் திரிவர், கால்நடையாகவும் திரிவர். காவற்பணி மேற்கொண்டு கடைத்தெருவில் திரிவர்.
வான வண்கை வளங்கெழு செல்வர்\nநாள்மகிழ் இருக்கை காண்மார் பூணொடு\nதெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழல்\nதாவற விளங்கிய வாய்பொன் னவிரிழை\nஅணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர்\nமணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழ\nஒண்குழை திகழும் ஒளிகெழு திருமுகந்\nதிண்காழ் ஏற்ற வியலிரு விலோதந்\nதெண்கடற் றிரையின் அசைவளி புடைப்ப\nநிரைநிலை மாடத் தரமியந் தோறும்\nமழைமாய் மதியிற் றோன்றுபு மறைய
மாடவெளியில் மகளிர் உலாவுவர். வானம் போல் வழங்கும் வளம் படைத்த செல்வர் குடும்பத்தைச் சேர்ந்த மகளிர் அரசன் அரியணையில் இருந்துகொண்டு கொடை வழங்கும் நாள்மகிழ் இருக்கை காண்பதற்காகத் தெருவில் ஓடுவர். அப்போது அவர்கள் அணிந்திருந்த சிலம்பின் பரல் ஒலிக்கும். பொன்னணிகள் ஒளிரும். அழகிய வளையல்கள் பாடும். அழகுத் தெய்வங்களே ஆசை கொள்ளும் அழகுடையவர்கள் அவர்கள். காதில் ஒளி வீசும் குழைகள் அவர்களின் கட்டழகுத் திருமுகத்தை மேலும் கவின் பெறச் செய்யும். அவர்கள் ஓடும்போது தெருவெல்லாம் மணம் வீசும். மற்றொருபுறம் மாடத்தில் உலாவும் மயிலியலார். மழை மேகத்தில் மறையும் மதியம் போல மாடவெளியில் பட்டப் பகலில் தென்றல் காயும் மகளிர் அசையும் தம் கூந்தலில் மறைந்து மறைந்து வெளிப்படுவர்.
திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை\nஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்\nதாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்\nதாமு மவரும் ஓராங்கு விளங்கக்\nகாமர் கவினிய பேரிளம் பெண்டிர்\nபூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்\nசிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ்
பூவும் புகையும் ஏந்திக் கொட்டு முழக்குடன் சென்று பேரிளம் பெண்டிர் மதுரைச் சிவபெருமானை வழிபடுவர் - மழுவை வாளாக ஏந்திக்கொண்டிருப்பவன் சிவச்செல்வன் நெடியோன். அவன் நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தையும் படைத்தவன். அவனைத் தலைவனாகக் கொண்டவர்கள் இமையா நாட்டத்துப் பலர். (தேவர்) அவர்கள் உயிர்பலி பெறும் நாற்ற உணவினை விரும்புவர். அவர்களுக்குப் பலி கொடுப்பதற்காக ஒருபுறம் மக்கள் அந்திவிழா கொண்டாடிக் கொண்டிருப்பர். அங்கே தூரியப் பறை கறங்கும். தாமரை மொட்டைத் தோளில் தழுவுவது போல மகளிர் தம் குழந்தைகளைத் தழுவிக்கொண்டு அவ் விழாவுக்குச் செல்வர். பேரிளம் பெண்டிர் பூப் போட்டும், புகை காட்டியும் இமையா நாட்டத்துத் தேவர்களை வழிபட்டுப் போற்றுவர். இது சிவன் கடவுள் பள்ளி.
சிறந்த வேதம் விளங்கப் பாடி\nவிழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து\nநிலமமர் வையத் தொருதா மாகி\nஉயர்நிலை யுலக மிவணின் றெய்தும்\nஅறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்\nபெரியோர் மேஎ யினிதி னுறையுங்\nகுன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்
அந்தணர் பள்ளியில் வாழ்வோர் பெரியோர். அந்தப் பெரியோர் சிறந்த வேதம் விளங்கும்படிப் பாடுவர். மேலான சீருடன் வாழ்பவர்கள். ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள். நிலத்தை விரும்பி வையத்தில் வாழ்பவர்கள். இந்த உலகத்தில் இருந்துகொண்டே உயர்நிலை உலகத்தை அடைபவர்கள். அறநெறி பிழையாதவர்கள். அன்புடை நெஞ்சம் கொண்டவர்கள். (ஒப்பு நோக்குக; ‘அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்- குறள்) மலைக்குன்றைக் குடைந்து வைத்தது போன்ற வீடுகளில் அவர்கள் வாழ்ந்தனர். (வேதம் சிறப்புற்று விளங்கப் பாடினார்களா? மக்களுக்கு விளங்கப் பாடினார்கள் என்றால் அது தமிழ்வேதம்)
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்\nபூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்\nசென்ற காலமும் வரூஉ மமயமும்\nஇன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து\nவானமு நிலனுந் தாமுழு துணருஞ்\nசான்ற கொள்கைச் சாயா யாக்க\nஆன்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
அகன்ற அறிவும், அதனைக் காட்டிக்கொள்ளாத அடக்கமும் கொண்டு வாழ்பவர் ஆன்றடங்கு அறிஞர். அவர்கள் செறிவும் உடையவர்கள். (அடக்கம் என்பது பகட்டு இல்லாமை. செறிவு அறிவில் செறிவு. ஆன்ற அறிவு என்பது பல்துறையிலும் பரந்திருக்கும் அறிவு.) அவர்களின் கொள்கை சால்பினை உடையது. உடல் சாயாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உலகுக்கு உதவுபவர்கள். தேன் நாவில் இனிப்பது போல் அவர்களின் தோற்றம் பார்வைக்கே இனிக்கும். சாவகர் என்போர் அந்த நோன்பிகளின் மாணாக்கர்கள். நோன்பிக்குத் தொண்டு செய்வோரும் சாவகர்களே. (சாவகர் என்பதால் இவர்களைச் சமணத் துறவியர் என்றும் கருதலாம்.) இந்தக் காலத்தை எல்லாரும் அவரவர்களுக்குத் தெரிந்த அளவில் பார்க்கின்றனர். இவர்களோ கடந்த காலத்தை எண்ணிப் பார்த்து, அதனால் எதிர் காலத்தில் நிகழப்போவதையும் தெளிவாக உணர வல்லவர்கள். தம்மைச் சூழ்ந்துள்ள ஒக்கல், தம்மை நாடிவரும் ஒக்கல் ஆகியோரின் எதிர்காலம் பற்றியும் அறிந்துரைக்க வல்லவர்கள் இவர்கள்
End of preview. Expand in Data Studio

PaaPeyarchi - Tamil Intralingual Poetry Translation Dataset

image/png

Dataset Description

This dataset serves as a Tamil intralingual poetry translation tasks in Tamil, specifically targeting the conversion of Classical Tamil poetry into Modern Tamil prose. It provides poems from various Tamil literature to train the ability of machine learning models to retain the semantic essence and stylistic nuances of classical texts while making them accessible to contemporary readers.

Key Features

  • classic: Classical Tamil poetry (original and preprocessed forms).
  • Description: Modern Tamil prose translations (original and preprocessed forms).

Dataset Details

Column Description
classic Classical Tamil poetic excerpt in its original form.
Description Modern Tamil prose translation in its original form.

DataSet - Literature vs Poems collected

Tamil Literature No. of Poems Collected
பதினெண் கீழ்க்கணக்கு - ஐந்திணை ஐம்பது 50
பதினெண் கீழ்க்கணக்கு - ஐந்திணை எழுபது 68
பதினெண் கீழ்க்கணக்கு - ஆசாரக் கோவை 99
பதினெண் கீழ்க்கணக்கு - ஏலாதி 82
பதினெண் கீழ்க்கணக்கு - இன்னா நாற்பது 40
பதினெண் கீழ்க்கணக்கு - இனியவை நாற்பது 40
பதினெண் கீழ்க்கணக்கு - கைந்நிலை 60
பதினெண் கீழ்க்கணக்கு - களவழி நாற்பது 41
பதினெண் கீழ்க்கணக்கு - கார் நாற்பது 39
பதினெண் கீழ்க்கணக்கு - முதுமொழிக் காஞ்சி 99
பதினெண் கீழ்க்கணக்கு - நாலடியார் 399
பதினெண் கீழ்க்கணக்கு - நான்மணிக்கடிகை 100
பதினெண் கீழ்க்கணக்கு - பழமொழி நானூறு 399
பதினெண் கீழ்க்கணக்கு - சிறுபஞ்சமூலம் 100
பதினெண் கீழ்க்கணக்கு - திணைமாலை நூற்றைம்பது 150
பதினெண் கீழ்க்கணக்கு - திணைமொழி ஐம்பது 50
பதினெண் கீழ்க்கணக்கு - திரிகடுகம் 101
பதினெண் கீழ்க்கணக்கு - முப்பால் (திருக்குறள்) 1330
எட்டுத்தொகை - குறுந்தொகை 400
எட்டுத்தொகை - நற்றிணை 399
எட்டுத்தொகை - ஐங்குறுநூறு 499
எட்டுத்தொகை - புறநானூறு 399
பத்துப்பாட்டு - மலைபடுகடாம் 46
பத்துப்பாட்டு - மதுரைக்காஞ்சி 63
திருமூலர் திருமந்திரம் 1767

In addition to the manually curated dataset, and in order to get the better model learning, some of the 800 poems with original text (as written by the poet) were reused with the same explanation after considering the segmented poetry text (சீர்பிரித்தது) as below.

  • Original poetry (as written by author) அகனறார வழிமுத லாதிப பிரானு மிவனறா னெனநின றெளியனு மலலன சிவனறான பலபல சீவனு மாகு நயனறான வருமவழி நாமறி யொமெ.
  • Segmented poetry (சீர்பிரித்தது) அகன்றார் வழி முதல் ஆதி பிரானும் இவன் தான் என நின்று எளியனும் அல்லன் சிவன் தான் பல பல சீவனும் ஆகும் நயன்று தான் வரும் வழி நாம் அறியோமே.

Sample Content

Example entry:

  • classic: தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை \n தீரா இடும்பை தரும்.
  • Description: மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

Supported Tasks

  • Translation: Classical Tamil → Modern Tamil.

Languages

  • Source Language: Tamil (Classical Tamil).
  • Target Language: Tamil (Modern Tamil).

Dataset Size

  • Total samples: around 7.5K

Citation

If you use this dataset, please cite it as:

@dataset{akdiwahar_2025,
      title={PaaPeyarchi - Tamil Intralingual Translation Dataset}, 
      author={Diwahar A K},
      year={2025},
      publisher={Hugging Face},
      note={Available at https://huggingface.co/datasets/akdiwahar/PaaPeyarchi} 
}

License

This dataset is released under [cc-by-nc-2.0]. Ensure compliance with the terms of use.

Acknowledgments

Special thanks to the contributors and scholars who assisted in the curation and validation of this dataset.

Downloads last month
58

Models trained or fine-tuned on akdiwahar/PaaPeyarchi